தினேஷ் கார்த்திக் பிடித்த சூப்பர் டைவ் கேட்ச்.. ஏமாந்த ப்ரித்வி ஷா.. பழி தீர்த்த கொல்கத்தா!!
கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரின் 26வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளும் சந்திக்கும் இரண்டாவது போட்டியாகும்.
முதல் சந்திப்பில் கொல்கத்தா அணியை வீழ்த்த காரணமாக விளங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா இந்தப் போட்டியில் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

கொல்கத்தா ரன் குவிப்பு
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில் 65, ரஸ்ஸல் 45 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில் 178 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸிங் செய்யத் துவங்கிய டெல்லி அணிக்கு ப்ரித்வி ஷா 3வது ஓவரில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

எட்ஜ் ஆன பந்து
பிரசித் கிருஷ்ணா வீசிய 3வது ஓவரின் கடைசி பந்தை ப்ரித்வி ஷா தடுக்க முயன்றார். ஆனால், பந்து எட்ஜ் ஆனது. நேராக பின்புறம் சென்ற பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.

கடினமான கேட்ச்
இது சற்று கடினமான கேட்ச் என்றாலும், தினேஷ் கார்த்திக் சரியாக பந்தின் திசையை கணித்து டைவ் அடித்து பந்தை பிடித்தார். கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 99 ரன்கள் எடுத்த ப்ரித்வி ஷா, தினேஷ் கார்த்திக் பிடித்த அருமையான கேட்ச்சால் 14 ரன்களில் வெளியேறினார்.

தாக்கம்
ப்ரித்வி ஷா இந்த ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் எடுத்த 99 ரன்களை தவிர்த்து, மற்ற போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்தப் போட்டியிலும் அது தொடர்ந்தது. முதல் போட்டியில் கொல்கத்தா அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த ப்ரித்வி ஷாவை விரைவில் வீழ்த்தி பழி தீர்த்துக் கொண்டது கொல்கத்தா.


Click it and Unblock the Notifications