Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெரியாம தப்பு பண்ணிட்டு ரசிகர்களிடம் சிக்கிய அஸ்வின்.. சந்து பொந்து விடாமல் கேலி, கிண்டல்!

Recommended Video

Punjab Vs Kolkata: No-ball Saves Russell : ரஸ்ஸல் அவுட் நோ பால் தான்.. ஆனா எப்படி தெரியுமா?- வீடியோ

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரின் மையப் புள்ளியாக மாறியுள்ளார் அஸ்வின். அதுவும் தவறான காரணத்துக்காக! ராஜஸ்தான் அணி வீரர் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார்.

அதைத் தொடர்ந்து அஸ்வின் கிரிக்கெட் நெறிப்படி எச்சரிக்கை கொடுக்காமல் போட்டியில் வெற்றி பெற வேண்டி, கிரிக்கெட் விதியை காரணம் காட்டி, இப்படி ரன் அவுட் செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டது.

பஞ்சாப் அணி தோல்வி

பஞ்சாப் அணி தோல்வி

ரசிகர்கள் அஸ்வின் மேல் கடும் கோபத்தில் இருக்கும் நிலையில், அடுத்த போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் கேப்டனாக இருக்கும் பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது.

 விதிப்படி தவறு

விதிப்படி தவறு

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி பீல்டிங் நிற்பதில் விதிப்படி ஒரு தவறு செய்தது, அந்தத் தவறால், ரஸ்ஸல் விக்கெட்டை எடுக்கும் வாய்ப்பை இழந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரஸ்ஸல் அதிரடி ஆட்டம் ஆடி பெரிய இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயிக்க உதவினார். அதுவே பஞ்சாப் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

கேலி

கேலி

இதை பயன்படுத்திக் கொண்ட ரசிகர்கள், இணையத்தில் அஸ்வினை மிக மோசமாக கேலி செய்து வருகிறார்கள். குறிப்பாக அஸ்வின் அணி செய்த பீல்டிங் குளறுபடிக்கு கேப்டனாக அவர் தான் பொறுப்பு என்பதால் அவரை ஓட்டி வருகிறார்கள்.

இது தான் விதி

அஸ்வின் இது தான் விதி என அஸ்வின் பட்லரை முதல் போட்டியில் விதியைக் காட்டி ஆட்டமிழக்கச் செய்த நிலையில், அடுத்த போட்டியில் மற்றொரு கிரிக்கெட் விதியால் முக்கியமான விக்கெட் எடுக்கும் வாய்ப்பை இழந்து விட்டார் என குத்திக் காட்டியுள்ளார் ஒருவர்.

டென்ஷன்

பாருங்க அஸ்வின் எப்படி டென்ஷன் ஆகிறார் என ஒருவர் அதையும் பார்த்து சந்தோஷப்படுகிறார். அஸ்வின் பந்துவீச்சில் சொதப்பியதையும் பலரும் கேலி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கேலி, கிண்டல் ஆரோக்கியமானதல்ல என்றாலும், 2019 ஐபிஎல் தொடர் முடியும் வரை இது ஓயாது என்றே தெரிகிறது.

Story first published: Thursday, March 28, 2019, 15:31 [IST]
Other articles published on Mar 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+