For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தா இமாலய ரன் குவித்து வெற்றி.. பஞ்சாப் பீல்டிங் சொதப்பல்.. மட்டமான பௌலிங்கால் தோல்வி!

Recommended Video

IPL 2019: Kolkata vs Punjab: கொல்கத்தா இமாலய ரன் குவித்து வெற்றி, பஞ்சாப் பீல்டிங் சொதப்பல்- வீடியோ

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரின் ஆறாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த ஆடுகளத்தில் எளிதாக ரன் குவிக்க முடியும், வேகப் பந்துவீச்சில் பந்து எகிறும் என கூறப்பட்டது.

சுனில் நரைன் அதிரடி

சுனில் நரைன் அதிரடி

அதனால், முதலில் பேட்டிங் செய்தால் அதிக ரன் குவிக்கலாம் என்ற நிலையில் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கிறிஸ் லின் 10 ரன்களில் வெளியேறி ஏமாற்றினாலும், கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் மின்னல் வேக துவக்கம் அளித்தார். 9 பந்துகளில் 24 ரன்கள் அடித்து தன் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினார்.

உத்தப்பா, ராணா அதிரடி

உத்தப்பா, ராணா அதிரடி

நரைன் கொடுத்த அதிரடி துவக்கத்தை அப்படியே தக்க வைத்தனர், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா ஜோடி. இவர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். ராணா 63 ரன்களில் ஆட்டமிழக்க ஆண்ட்ரே ரஸ்ஸல் 17 பந்துகளில் 47 ரன்கள் அடித்து தெறிக்கவிட்டார்.

பீல்டிங் சொதப்பல்

பீல்டிங் சொதப்பல்

உத்தப்பா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் அடித்து களத்தில் நின்றார். 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 218 ரன்களைக் கடந்தது. ரஸ்ஸல் ஆடிய கடைசி நேர ஆட்டம் இத்தனை பெரிய ரன்களுக்கு காரணமாக அமைந்தது. ரஸ்ஸல் 17வது ஓவரில் ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் அது பஞ்சாப் அணி விதிக்கு மாறாக செய்த பீல்டிங் சொதப்பலால் நோ பால் ஆனது. குறிப்பிடத்தக்கது.

கோட்டை விட்ட அஸ்வின்

கோட்டை விட்ட அஸ்வின்

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு மட்டமாக இருந்தது. கேப்டன் அஸ்வின் அணித்தேர்விலும், பந்துவீச்சாளரை பயன்படுத்துவதிலும் கோட்டை விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முஜீப் உர் ரஹ்மான் மற்றும் அங்கித்துக்கு பதிலாக இந்த போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, வேகப் பந்துவீச்சாளர் வில்ஜோன் அறிமுகம் செய்யப்பட்டனர்.

பஞ்சாப் பந்துவீச்சு

பஞ்சாப் பந்துவீச்சு

வருண் சக்கரவர்த்தி தன் முதல் ஓவரில் 25 ரன்கள் கொடுத்து ஷாக் கொடுத்தார். எனினும், முடிவில் 3 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்திருந்தார். மற்ற வீரர்களில் ஷமி 44, அஸ்வின் 47, டை 37, வில்ஜோன் 36 ரன்கள் கொடுத்தனர்.

இலக்கை எட்டாத பஞ்சாப்

இலக்கை எட்டாத பஞ்சாப்

அடுத்து கொல்கத்தா அணி 219 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடியது. ராகுல் 1, கிறிஸ் கெயில் 20 ரன்களில் வெளியேறி மோசமான துவக்கம் அளித்தனர். சர்ப்ராஸ் கான் 13 ரன்கள் மட்டுமே அடித்து நடையைக் கட்டினார். மாயங்க் அகர்வால் 58, டேவிட் மில்லர் 59, மந்தீப் சிங் 33 ரன்கள் என எடுத்தாலும், இமாலய இலக்கை எட்டும் அளவுக்கு இவர்களால் அதிரடி காட்ட முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழந்து, 190 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப்.

பஞ்சாப் பரிதாபம்

பஞ்சாப் பரிதாபம்

பஞ்சாப் அணி 4 விக்கெட்கள் மட்டுமே இழந்து இருந்தாலும், நான்கு பேட்ஸ்மேன்கள் 147 முதல் 220 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தாலும், அவர்களால், 219 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்ட முடியவில்லை. கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா பந்துவீச்சு

கொல்கத்தா பந்துவீச்சு

கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் குல்தீப் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்தார். ரஸ்ஸல் 3 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். பியுஷ் சாவ்லா 3 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 42 ரன்களும், சுனில் நரைன் 2 ஓவர்களில் 1 விக்கெட் மற்றும் 26 ரன்களும் கொடுத்து இருந்தனர்.

Story first published: Thursday, March 28, 2019, 11:10 [IST]
Other articles published on Mar 28, 2019
English summary
KKR vs KXIP IPL 2019 : Kolkata Knight Riders hit hard to beat Kings XI Punjab
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+