Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs LSG: பண்ட் அணிக்கு எதிராக ரஹானே, பவல் சரவெடி.. கொல்கத்தா அணி 181 ரன்கள் குவிப்பு

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய கொல்கத்தா அணி களமிறங்கியது.

தொடக்க வீரர் பின் ஆலன் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் பின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே உடன் விக்கெட் கீப்பர் அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். இருவரும் லக்னோ அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்தது.

KKR vs LSG Ajinkya Rahane and Angkrish Raghuvanshi Steady Kolkata Before Green-Powell Fireworks

அதிரடியாக ஆடிய ரஹானே 24 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுத்து திக்வேஷ் சிங் ரதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரகுவன்ஷி 33 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 45 ரன்கள் எடுத்து மணிமாறன் சித்தார்த் சுழலில் வீழ்ந்தார். சொந்த மண்ணில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய அதிரடி வீரர் ரிங்கு சிங் 4 ரன்களில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால் கொல்கத்தா அணி 13.2 ஓவரில் 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது. இந்த நெருக்கடியான நிலையில் கேமரூன் கிரீன் மற்றும் ரோவ்மன் பவல் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆட்டமிழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது.

ஆட்டத்தின் முடிவில் ரோவ்மன் பவல் 24 பந்துகளில் 39 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 24 பந்துகளில் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் திக்வேஷ் சிங் ரதி, பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான் மற்றும் மணிமாறன் சித்தார்த் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முகமது ஷமி 4 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனமாக பந்துவீசினார். இதையடுத்து லக்னோ அணிக்கு 182 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Story first published: Thursday, April 9, 2026, 21:34 [IST]
Other articles published on Apr 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+