Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs LSG: வருணுக்கு இடமில்லை.. KKR அணியில் உள்ளே வந்த சீனியர் ஆல்ரவுண்டர்.. பண்ட் டாஸ் வெற்றி

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

டாஸ் வென்ற பின் பேசிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், முதலில் பந்துவீசி எதிரணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. கடந்த போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம் அணியில் தற்போது நல்ல உற்சாகம் நிலவுகிறது. எங்கள் ஆடும் லெவனில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

KKR vs LSG Lucknow Super Giants Opt to Bowl as Sunil Narine Returns for Kolkata Knight Riders

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே கூறுகையில், நாங்களும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீசவே நினைத்தோம். கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அவருக்கு பதிலாக அனுபவ வீரர் சுனில் நரைன் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறினார்.

ஆடுகளத்தின் தன்மை குறித்து நிபுணர்கள் கூறுகையில், ஈடன் கார்டன்ஸ் மைதானம் எப்போதும் அதிக ரன்கள் குவிக்கும் இடமாகவே இருந்துள்ளது. இங்கு பவுண்டரி தூரம் 64 முதல் 65 மீட்டர் வரையிலும், நேராக 74 மீட்டர் தூரமும் உள்ளது. பந்து வேகமாக பேட்டிற்கு வரும் என்பதால் ரன் மழை பொழிய வாய்ப்புள்ளது.

ஆடுகளத்தில் சற்று வறட்சி காணப்படுவதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு ஒத்துழைப்பு கிடைக்கும். அதேசமயம் புதிய பந்து தொடக்கத்தில் நன்றாக ஸ்விங் ஆகும். இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை கூறுவதால், டக்வொர்த் லீவிஸ் விதிமுறையை கருத்தில் கொண்டே லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

கொல்கத்தா அணி: பின் ஆலன், அஜிங்க்யா ரஹானே, கேமரூன் கிரீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மன் பவல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங், சுனில் நரைன், அனுகுல் ராய், நவ்தீப் சைனி, கார்த்திக் தியாகி.

லக்னோ அணி: மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமத், முகுல் சவுத்ரி, சித்தார்த், ஆவேஷ் கான், முகமது ஷமி, திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இம்பாக்ட் வீரர்கள் - மணீஷ் பாண்டே, வைபவ் அரோரா, தேஜஸ்வி தஹியா, ராகுல் திரிபாதி, டிம் சீஃபர்ட்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இம்பாக்ட் வீரர்கள் - ஆயுஷ் படோனி, மேத்யூ பிரீட்ஸ்கே, ஷாபாஸ் அகமது, மயங்க் யாதவ், ஹிம்மத் சிங்

Story first published: Thursday, April 9, 2026, 19:16 [IST]
Other articles published on Apr 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+