Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs LSG: கடைசி பந்தில் சம்பவம் செய்த முகுல் சவுத்ரி.. உறைந்து போன கொல்கத்தா.. லக்னோ வெற்றி

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் கடைசி பந்து வரை சென்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இளம் வீரர் முகுல் சவுத்ரியின் ஒற்றை ஆட்டத்தால் லக்னோ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. இந்த ஆடுகளத்தின் தன்மைக்கு இது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சவாலான ஸ்கோராகவே பார்க்கப்பட்டது.

இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி அதிரடியாக ஆடத் துவங்கியது. ஆனால் தொடக்க வீரர்களான மிட்செல் மார்ஷ் 11 பந்துகளில் 15 ரன்களும், எய்டன் மார்க்ரம் 15 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 9 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். நிக்கோலஸ் பூரன் 15 பந்துகளில் 13 ரன்களிலும், அப்துல் சமது 4 பந்துகளில் 2 ரன்களிலும் வெளியேறினர்.

KKR vs LSG Mukul Choudhary s Last-Ball Heroics Power Lucknow to Thrilling 3-Wicket Win Over Kolkata

மறுபுறம் பொறுப்புடன் அதேசமயம் அதிரடியாக ஆடிய ஆயுஷ் பதோனி 34 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். ஒரு கட்டத்தில் லக்னோ அணி 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தத்தளித்தது. வெற்றிக்கு கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்ற மிகவும் இக்கட்டான நிலை உருவானது.

அப்போது களத்தில் இருந்த இளம் வீரர் முகுல் சவுத்ரி அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து மிரள வைத்தார். இவரது அதிரடியால் லக்னோ அணி அடுத்த 3 ஓவர்களில் 40 ரன்களை சேர்த்தது.

கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பரபரப்பான ஓவரிலும் துணிச்சலாக ஆடிய முகுல் சவுத்ரி 2 இமாலய சிக்சர்களை விளாசினார். ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட போது, பைஸ் முறையில் 1 ரன் ஓடி லக்னோ அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியில், முகுல் சவுத்ரி என்ற ஒற்றை வீரரின் அதிரடியால் கொல்கத்தா அணி பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.

Story first published: Thursday, April 9, 2026, 23:41 [IST]
Other articles published on Apr 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+