KKR vs PBKS: வருண் சக்கரவர்த்தி, நரைன் நீக்கம்.. கொல்கத்தா அணியில் அதிரடி.. பிளேயிங் 11 விவரம்
கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் அஜிங்க்யா ரஹானே முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் நீக்கப்பட்டனர்.
டாஸ் வென்ற பிறகு பேசிய ரஹானே, "ஆடுகளம் பேட்டிங்கிற்குச் சாதகமாகத் தெரிகிறது. புற்கள் குறைவாக இருப்பதால் ரன் குவிக்க ஏதுவாக இருக்கும். இன்றைய போட்டியில் கட்டாயத்தின் பேரில் இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளோம். கடந்த போட்டியில் கேட்ச் பிடித்தபோது வருண் சக்கரவர்த்தி காயமடைந்துள்ளார். அதேபோல் சுனில் நரைன் உடல்நலக்குறைவு காரணமாக விளையாடவில்லை. அவர்களுக்குப் பதிலாக ரோவ்மேன் பவல் மற்றும் நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றார்.

பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "நானும் முதலில் பந்துவீசவே நினைத்தேன், ரஹானேவின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் எனது கூட்டணி டெல்லி கேபிடல்ஸ் காலம் முதலே சிறப்பாக உள்ளது. அவர் இளைஞர்களுக்குப் பெரும் சுதந்திரம் அளிக்கிறார். இன்றைய போட்டியில் நாங்கள் அதே ஆடும் லெவனுடன் களமிறங்குகிறோம்" எனத் தெரிவித்தார்.
ஈடன் கார்டன்ஸ் ஆடுகளம் குறித்து வர்ணனையாளர்கள் டேரன் கங்கா மற்றும் கெவின் பீட்டர்சன் கூறுகையில், மைதானத்தைச் சுற்றி மழை மேகங்கள் காணப்படுகின்றன. ஆடுகளத்தில் பச்சை புற்கள் அதிகம் இருப்பதால் இது ஒரு ஹை-ஸ்கோரிங் மைதானமாக இருக்கும். நேராக 74 மீட்டர் மற்றும் பக்கவாட்டில் 64 மீட்டர் பவுண்டரி எல்லைகள் உள்ளன. ஒரு காலத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருந்த இந்த மைதானம், இப்போது பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக மாறியுள்ளது என்றனர்.
தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ள கொல்கத்தா அணிக்கு, தனது முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களான நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. மறுபுறம், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் தனது ஆதிக்கத்தைத் தொடர ஆர்வமாக உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஆடும் லெவன்):
ஃபின் ஆலன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேமரூன் க்ரீன், அங்குரிஷ் ரகுவன்ஷி (விக்கெட் கீப்பர்), ரோவ்மேன் பவல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங், அனுகுல் ராய், நவ்தீப் சைனி, வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி.
பஞ்சாப் கிங்ஸ் (ஆடும் லெவன்):
பிரப்சிம்ரன் சிங்(விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), கூப்பர் கோனாலி, நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்
பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: பிரியன்ஸ் ஆர்யா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், விஷ்ணு வினோத், பிரவின் துபே, ஹர்ப்ரீத் ப்ரார்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இம்பாக்ட் வீரர்கள்: பிளஸ்ஸிங் முசரபானி, மணீஷ் பாண்டே, தேஜஸ்வி சிங், ராகுல் திரிபாதி, சவுரப் துபே


Click it and Unblock the Notifications