For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எந்த அணியாலும் 300 ரன்களை அடிக்க முடியும்.. ஐபிஎல் தொடரின் ரேஞ்ச் வேற.. அடித்து சொல்லும் ரிங்கு சிங்

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் எந்த அணியாலும் 300 ரன்களை அடிக்க முடியும் என்று கேகேஆர் அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், டெத் ஓவர்களில் நிதானமாக இருந்து செயல்பட தோனி சில அட்வைஸ்களை கூறியதாகவும் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மூலமாக பலரும் விளம்பரம் தேடி வந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கே விளம்பரமாக அமைந்தவர் ரிங்கு சிங். யாஷ் தயாள் பவுலிங்கில் தொடர்ந்து 5 சிக்ஸ் விளாசி ரிங்கு சிங் கேகேஆர் அணிக்காக போட்டியை வென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அந்த வகையில் 'ஜென் போல்ட்' நட்சத்திரமான ரிங்கு சிங், JioHotstar-க்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

KKR vs PBKS In IPL 2025 Any team can score 300 runs and that s the range of this tournament says KKR Player Rinku Singh

அப்போது ரிங்கு சிங்கிடம் பினிஷரின் பங்கு மற்றும் ஃபிட்னஸ் குறித்த கேள்விக்கு, நான் பொதுவாக 5 அல்லது 6-ஆவது இடத்தில் பேட் செய்கிறேன். உத்தரப் பிரதேச அணிக்காகவும், ஐபிஎல் தொடரிலும் இதையே செய்து வருகிறேன். அதனால் ஃபினிஷிங் ரோலில் ஆடுவது எனக்கு பழக்கமாகிவிட்டது. 14 போட்டிகள் ஆட வேண்டிய ஐபிஎல் தொடரில், ஃபிட்னஸ் ரொம்பவே முக்கியம்.

வீரர்கள் தங்களை உடலை நன்றாக பராமரித்து, சரியாக மீண்டெடுக்க வேண்டும். அதனால் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்துகிறேன். இதற்காக தோனியிடம் அடிக்கடி பேசுவேன். அவர் எனக்கு எப்போதும் நிதானமாக இருந்து, போட்டியின் சூழலுக்கு ஏற்ப விளையாட அறிவுறுத்துவார். நிதானமாக விளையாடினாலே, எல்லாம் இயற்கையாக சரியாகிவிடும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து சீனியர்களான ரஸ்ஸல் போன்ற வீரர்களுடன் இணைந்து விளையாடுவது குறித்த கேள்விக்கு, ஐபிஎல் விளையாடத் தொடங்கியதில் இருந்து எனது கற்றல் எங்கும் நிற்கவில்லை. கேகேஆர் அணியின் ரஸ்ஸல் டெத் ஓவர்களில் எப்படி ஆடுகிறார், எப்படி உடலில் உள்ள வலிமையை பயன்படுத்துகிறார் என்பதைக் கவனமாக பார்க்கிறேன். அதில் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன் என்று கூறினார்.

பின்னர் ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்டு வரும் பெரிய ஸ்கோர்களை பற்றிய கேள்விக்கு, ஐபிஎல் தொடரில் 300 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை அடைய கூடிய நிலை உருவாகி இருக்கிறது. அதனை உறுதியாக நம்புகிறேன். கடந்த வருடம் பஞ்சாப் 262 ரன்களை எங்களுக்கு எதிராக சேஸ் செய்தது. இந்த சீசனில் எல்லா அணிகளும் வலுவாக உள்ளன. யார் வேண்டுமானாலும் 300 ரன்களை அடிக்க முடியும் என்று தெரிவித்தார்.

தற்போது நடந்து வரும் 'TATA IPL ரிவெஞ்ச் வீக்' ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் மோதலை JioHotstar மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரலையில் காணுங்கள். மேலும் இவ்வாறான புதிய தலைமுறை TATA IPL வீரர்களின் சிறப்பு பேட்டிகளை பார்வையிட, Star Sports 1 (SD மற்றும் HD) மற்றும் JioHotstar-இல் இணைந்திருங்கள்!

முழு எபிசோடைக் காண இங்கே கிளிக் செய்யவும்: https://www.hotstar.com/in/sports/cricket/rinku-reveals-his-finishing-secrets/1271408276/watch

Story first published: Saturday, April 26, 2025, 22:54 [IST]
Other articles published on Apr 26, 2025
English summary
KKR vs PBKS: In IPL 2025, Any team can score 300 runs and that's the range of this tournament says KKR Player Rinku Singh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+