For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6, 6, 6, 6, 6, 6.. 6 பந்துகளில் 6 சிக்ஸ் அடித்த ரியான் பராக்.. சாதனை படைத்த ராஜஸ்தான் கேப்டன்!

கொல்கத்தா: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் 6 பந்துகளில் 6 சிக்ஸ் அடித்து சாதனை படைத்துள்ளார். மொயின் அலிக்கு எதிராக 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசிய ரியான் பராக், அடுத்ததாக வருண் சக்கரவர்த்தி ஓவரில் எதிர்கொண்ட முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸ் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

KKR vs RR Rajasthan Captain Riyan Parag hits a 6 Sixes in 6 Balls against KKR at Kolkata

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் கேகேஆர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் கேகேஆர் அணி 1 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் 45 பந்துகளில் 8 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 95 ரன்களை விளாசி தள்ளினார். 12 ஓவர்கள் வரை நிதானமாக ஆடிய ரியான் பராக், 13வது ஓவரை வீசிய மொயின் அலி பவுலிங்கில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை பறக்கவிட்டார். தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தார். இதன் மூலமாக ரியான் பராக் 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி தள்ளினார்.

அதேபோல் மொயின் அலி வீசிய ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசியதன் மூலமாக, ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய 5வது வீரர் என்ற சாதனையை ரியான் பராக் படைத்துள்ளார். இந்த பட்டியலில் கிறிஸ் கெய்ல், ராகுல் டிவாட்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ரியான் பராக் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை அடிப்பேன் என்று பதிவிட்டிருந்தார். ஆனால் ரியான் பராக் மோசமான ஃபார்மில் ஆடி வந்ததால், அந்த சாதனையை அவரால் படைக்க முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ரியான் பராக் சொன்னதை செய்து காட்டி இருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

Story first published: Sunday, May 4, 2025, 18:47 [IST]
Other articles published on May 4, 2025
English summary
KKR vs RR: Rajasthan Captain Riyan Parag hits a 6 Sixes in 6 Balls against KKR at Kolkata
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+