For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னா அடி!! கேப்டன் புவனேஸ்வர் கைக்கு கிடைச்ச வெற்றியை.. வாய்க்கு கிடைக்காமல் செய்த ஆண்ட்ரே ரஸ்ஸல்!!

கொல்கத்தா : கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிக்கு அருகே வந்து தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 181 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அந்த அணியின் வார்னர் 85, பேர்ஸ்டோ 39, விஜய் ஷங்கர் 40 ரன்கள் குவித்தனர்.

ரன் ரேட் 7.50

ரன் ரேட் 7.50

அடுத்து ஆடிய கொல்கத்தா அணிக்கு நிதிஷ் ராணா 68, ராபின் உத்தப்பா 35 நம்பிக்கை அளித்தாலும், ரன் ரேட் 7.50-ஐ ஒட்டியே இருந்தது. அந்த நேரத்தில் விக்கெட்கள் விழ ஆண்ட்ரே ரஸ்ஸல் 13வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார்.

ராணா பேட்டிங்

ராணா பேட்டிங்

அப்போது ராணா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். எனவே, அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கும் வேலையை மட்டும் செய்து வந்தார் ரஸ்ஸல். ராணா ஆட்டமிழக்க, ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார் ரஸ்ஸல்.

53 ரன்கள் தேவை

53 ரன்கள் தேவை

17வது ஓவர் முடியும் வரை பொறுமை காத்தார் ரஸ்ஸல். அப்போது அவர் 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். கொல்கத்தா அணிக்கு 3 ஓவர்களில் 53 ரன்கள் தேவை என்ற நிலை. ஓவருக்கு 17.66 ரன்கள் எடுக்க வேண்டும்.

யாரென்று காட்டினார்

யாரென்று காட்டினார்

அப்போது போட்டியை தன் வசம் எடுத்துக் கொண்டார் ரஸ்ஸல். அதிரடியில் தான் யார் என காட்ட முடிவு செய்த ஆண்ட்ரே ரஸ்ஸல் காட்டு காட்டென்று காட்டினார். 18வது ஓவரில் சித்தார்த் கௌல் பந்து வீச்சில் 5 பந்துகளை சந்தித்தார். அந்த ஓவரில் ஒரு ஃபோர், இரண்டு சிக்ஸ் அடிக்க மொத்தமாக 19 ரன்கள் கிடைத்தது.

குறிவைத்த ரஸ்ஸல்

குறிவைத்த ரஸ்ஸல்

அடுத்து 19வது ஓவரில் ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சை குறிவைத்த ரஸ்ஸல் இரண்டு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்தார். 21 ரன்கள் கிடைத்தது.

ஷுப்மன் கில்

ஷுப்மன் கில்

கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், ரஸ்ஸல் ஒரு ரன் ஓடியதால் ஸ்ட்ரைக் ஷுப்மன் கில்லுக்கு சென்றது. அவர் தன் பங்குக்கு இரண்டு சிக்ஸ் அடித்து போட்டியை முடித்து வைத்தார். ரஸ்ஸல் இந்த போட்டியில் 19 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் - 257.89.

பறிகொடுத்தார்

பறிகொடுத்தார்

ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் தன் முதல் மூன்று ஓவர்களை கட்டுக் கோப்பாக வீசி இருந்தார். அதனால், வெற்றி கைக்கு எட்டிய தூரத்தில் இருந்தது. ஆனால், தன் நான்காவது (19வது ஓவர்) ஓவரில் 21 ரன்கள் கொடுத்து சொதப்பி, கேப்டனாக தன் முதல் வெற்றியை பறிகொடுத்தார்.

Story first published: Monday, March 25, 2019, 8:30 [IST]
Other articles published on Mar 25, 2019
English summary
KKR vs SRH IPL 2019 : Andre Russell took KKR to victory
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+