Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs SRH : அந்த கடைசி 3 ஓவர் இருக்கே.. அப்பப்பா!! கொல்கத்தாவிடம் வெற்றியை பறிகொடுத்த ஹைதரபாத்!!

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்றது.

இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைத்த இந்த போட்டியில், கொல்கத்தா அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

ஹைதராபாத் சூப்பர் பேட்டிங்

ஹைதராபாத் சூப்பர் பேட்டிங்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு வார்னர் - பேர்ஸ்டோவ் அபார துவக்கம் அளித்தனர். வார்னர் 85, பேர்ஸ்டோவ் 39 ரன்கள் எடுத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து கொல்கத்தா அணிக்கு அழுத்தம் கொடுத்தனர்.

விஜய் ஷங்கர்

விஜய் ஷங்கர்

அடுத்து விஜய் ஷங்கர் ஹைதராபாத் அணியில் ஸ்கோரை உயர்த்த உதவினார். அவர் 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா பந்துவீச்சு

கொல்கத்தா பந்துவீச்சு

கொல்கத்தா அணி பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. அனைத்து பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி இறைத்தனர். ரஸ்ஸல் 2, பியுஷ் சாவ்லா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கொல்கத்தா நிதானம்

கொல்கத்தா நிதானம்

ஓவருக்கு 9 ரன்கள் எடுத்தால் மட்டுமே 182 ரன்கள் எட்ட முடியும் என்ற நிலையில், துவக்க வீரர் கிறிஸ் லின் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிதிஷ் ராணா - ராபின் உத்தப்பா இணைந்து ரன் எடுக்கத் துவங்கினர். இவர்கள் ஓவருக்கு 7 ரன்கள் மட்டுமே எடுத்து வந்தனர்.

கடைசி நேர அதிரடி

கடைசி நேர அதிரடி

நிதிஷ் ராணா 68, ராபின் உத்தப்பா 35, தினேஷ் கார்த்திக் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆண்ட்ரே ரஸ்ஸல் - ஷுப்மன் கில் கடைசி 3 ஓவர்களில் 19, 21, 14 ரன்கள் என குவிக்க கொல்கத்தா கடைசி இரண்டு பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத் பரிதாபம்

ஹைதராபாத் பரிதாபம்

கடந்த சீசனில் இரண்டாம் இடம் பிடித்த ஹைதராபாத் அணி தோல்வியுடன் தொடரை துவக்கி உள்ளது. தங்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் இல்லமால் அந்த அணி தடுமாறத் துவங்கி உள்ளது. வார்னரின் அதிரடி அரைசதமும் வீணானது.

Story first published: Sunday, March 24, 2019, 20:45 [IST]
Other articles published on Mar 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+