Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs SRH: அரைகுறை பவுலிங்கை வைத்தே கொல்கத்தா அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ்.. மாபெரும் வெற்றி!

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையிலும், அனுபவம் குறைந்த பவுலர்களை வைத்துக்கொண்டே கொல்கத்தா அணியை அதன் சொந்த மண்ணிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீழ்த்தியது.

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்தது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் 46 ரன்களும், அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 48 ரன்களும் விளாசி மின்னல்வேக தொடக்கத்தை கொடுத்தனர். மிடில் ஆர்டரில் ஹென்ரிச் கிளாசென் 35 பந்துகளில் 52 ரன்களும், நிதீஷ் குமார் ரெட்டி 24 பந்துகளில் 39 ரன்களும் குவித்து அணியின் ஸ்கோரை எகிற வைத்தனர். கொல்கத்தா தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

KKR vs SRH SRH Crush KKR by 65 Runs at Eden Gardens Clinical Bowling Performance Seals Dominant Victory

இதனையடுத்து 227 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியது. கேப்டன் அஜிங்க்யா ரஹானே 8 ரன்களில் ஏமாற்றமளித்தார். அதிரடியாக மட்டையை சுழற்றிய ஃபின் ஆலன் 7 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அங்குரிஷ் ரகுவன்ஷி மட்டுமே தனி ஆளாகப் போராடி 29 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். ரிங்கு சிங் 35 ரன்கள் எடுத்தார். கேமரூன் க்ரீன், சுனில் நரைன் போன்ற அதிரடி வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாக காணப்பட்டாலும், கிடைத்த பவுலர்களைக் கொண்டு எதிரணியை ஹைதராபாத் சிறப்பாகக் கட்டுப்படுத்தியது. மூத்த வீரரான ஜெய்தேவ் உனத்கட் நேர்த்தியாக பந்துவீசி 3 ஓவர்களில் 21 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இளம் வீரர்களான எஷான் மலிங்கா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ஹர்ஷ் துபே 1 விக்கெட்டை எடுத்தார்.

சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களின் சிறப்பான தாக்குதலால் கொல்கத்தா அணி 16 ஓவர்களிலேயே 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.

Story first published: Thursday, April 2, 2026, 23:25 [IST]
Other articles published on Apr 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+