Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs SRH: கொல்கத்தா அணியை பொளந்த சன்ரைசர்ஸ்.. வெளுத்து வாங்கிய அபிஷேக், டிராவிஸ், கிளாசென்

கொல்கத்தா: 2026 ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்தது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. கொல்கத்தா பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர்பிளேயில் 84 ரன்களை வாரி குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 34 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்த நிலையில், டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் எடுத்து கார்த்திக் தியாகி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

KKR vs SRH Sunrisers Hyderabad Post Massive 226 8 Against KKR Travis Head and Abhishek Sharma Direct Powerplay Carnage

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இஷான் கிஷன் 14 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் குவித்து பிளெஸ்ஸிங் முசரபானி பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த அனிகேத் வர்மா 1 ரன்னில் வெளியேற, 118 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் சற்று தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 53 பந்துகளில் 82 ரன்கள் கூட்டணி அமைத்தனர். நிதீஷ் குமார் ரெட்டி 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் பொறுப்புடன் ஆடிய கிளாசென் 35 பந்துகளில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 52 ரன்கள் குவித்து அரைசதம் பதிவு செய்து ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ஹர்ஷ் துபே 3 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் அணி 226 ரன்களை எட்டியது.

கொல்கத்தா பந்துவீச்சை பொறுத்தவரை பிளெஸ்ஸிங் முசரபானி 4 ஓவர்களில் 41 ரன்களை கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வைபவ் அரோரா 47 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், அனுகுல் ராய் மற்றும் கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். சுனில் நரைன் விக்கெட் எடுக்காவிட்டாலும் 39 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

Story first published: Thursday, April 2, 2026, 21:39 [IST]
Other articles published on Apr 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+