Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KL Rahul: இந்திய கிரிக்கெட்டில் முதல் முறை.. 67 பந்தில் 152 ரன்கள் குவித்து பல சாதனைகளை முறியடித்த ராகுல்

டெல்லி: ஐபிஎல் 2026 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிட்டஸ் வீரர் கேஎல் ராகுல், ஆட்டமிழக்காமல் 152 ரன்கள் குவித்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இது டி20 கிரிக்கெட்டில் ஒரு இந்தியரால் அடிக்கப்பட்ட மிக உயர்ந்த ஸ்கோராகும். மேலும், இது அவரது ஆறாவது ஐபிஎல் சதம் ஆகும். இதன் மூலம் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் நீண்டகால சாதனையை சமன் செய்தது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ராகுல், 16 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் அதிரடியாக ஆடினார். ஐபிஎல் வரலாற்றில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். கடந்த 2024 நவம்பரில் சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஹைதராபாத்துக்காக திலக் வர்மா அடித்த 151 ரன்கள் என்ற முந்தைய இந்திய டி20 சாதனையை இதன் மூலம் ராகுல் முறியடித்தார்.

ராகுல் குவித்த 152 ரன்கள், ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த தனிநபர் ஸ்கோராகும். கிறிஸ் கெய்ல் (175) மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் (158) ஆகியோர் மட்டுமே இதற்கு முன்பு 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

47 பந்துகளில் சதம் அடித்த ராகுல், ஐபிஎல் வரலாற்றில் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக பல சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய மூன்று அணிகளுக்காக தலா இரண்டு சதங்களை பதிவு செய்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியில், ஷஷாங்க் சிங் 18 ரன்களில் ராகுலை தவறவிட்ட நிலையில், அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பஞ்சாப் அணியை அதிக விலை கொடுக்கச் செய்தார். ராகுல், நிதிஷ் ராணாவுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு அபாரமான 220 ரன்கள் சேர்த்தார்.

இந்த 220 ரன்கள் கூட்டணி ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது மிக உயர்ந்ததாகும். இதற்கு முன் விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஜோடி குவித்த 229 ரன்களுக்குப் பின் இது வருகிறது. ராணா 44 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் குவித்து, ராகுலுக்கு சிறந்த ஆதரவை வழங்கினார்.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே ராகுல் ஆக்ரோஷமாக விளையாடினார். பதும் நிஸ்ஸங்கா தனது ஆட்டத்தை முடிப்பதற்கு முன் சில ரன்களை சேர்த்து உதவினார். பவர்ப்ளேயில் டெல்லி அணி 68 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து வலுவான அடித்தளமிட்டது. ராகுல் மற்றும் ராணா ஜோடி மிடில் ஓவர்களில் மேலும் 145 ரன்கள் சேர்த்து அசத்தியுள்ளது. இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Saturday, April 25, 2026, 18:36 [IST]
Other articles published on Apr 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+