Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி.. நம்பிக்கை அளித்த ராகுல்.. மற்றவர்கள் சொதப்பல்.. ஸ்கோர் விவரம்

பெர்த் : 2022 டி20 உலககோப்பை தொடருக்கு முன்பு வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடனான 2வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி என 3 வீரர்களும் பேட் செய்யவில்லை. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், 2வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டனாக ராகுல் செயல்பட்டார்.

அரைசதம்

அரைசதம்

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆர்ஷ்தீப் சிங் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பவர்பிளே முடிவில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி 54 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியின் ஹாப்சன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். டார்சி சார்ட் தன் பங்கிற்கு அரைசதம் விளாச சிறப்பாக விளையாடிய ஹாப்சன் 64 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்சல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 13 ஓவர் முடிவில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி 125 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

அஸ்வின் 3 விக்கெட்

அஸ்வின் 3 விக்கெட்

தமிழக வீரர் அஸ்வின் 17வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்த வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. 18வது ஓவரில் ஆர்ஷ்தீப் 6 ரன்களை விட்டு கொடுக்க, புவனேஸ்வர் குமார் 19வது ஓவரில் 7 ரன்களை மட்டுமே கொடுத்தார். எனினும் 20வது ஓவரில் ஹர்சல் 15 ரன்களை வழங்க,வெஸ்ட்ர்ன் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், ஹர்சல் 2 விக்கெட்டும்,ஆர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தடுமாறிய தொடக்கம்

தடுமாறிய தொடக்கம்

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது . தொடக்க வீரராக ராகுல், ரிஷப் பண்ட் ஜோடி களமிறங்கியது. பண்ட் 9 ரன்களில் வெளியேற, தீபக் ஹூடா 6 ரன்களை மட்டுமே சேர்த்தார். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 2 சிக்சர்களை பறக்கவிட்டார். எனினும் அவர் 17 ரன்களில் வெளியேறினார். அக்சர் பட்டேலால் 2 ரன்கள் மட்டுமெ எடுக்க முடிந்தது.

இந்தியா தோல்வி

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்ததால், நிதானமாக விளையாடும் நிலைக்கு ராகுல் தள்ளப்பட்டார். 45 பந்துகளில் தான் ராகுல் அரைசதம் கடந்தார். அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட கார்த்திக்கும் 10 ரன்களில் வெளியற, ராகுல் அதிரடியை காட்டி தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசினார். ராகுல் 55 பந்துகளில் 74 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Story first published: Thursday, October 13, 2022, 19:24 [IST]
Other articles published on Oct 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+