Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 பந்துகள் வேஸ்ட்.. 3வது முறையாக திணறிய கே.எல்.ராகுல்.. பொறுமை இழந்த ரசிகர்கள்.. தவறு செய்வது எங்கே?

பெர்த் : டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர் கேஎல் ராகுல் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

பெர்த் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ரோகித் சர்மா தன் மீதும், தன் உயிர் நண்பன் மீதும் நம்பிக்கை இல்லாததன் காரணமாக, கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை இன்றைய ஆட்டத்தில் சேர்த்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகித்தும், ராகுலும் தொடர்ந்து முக்கிய அட்டத்தில் சொதப்பி வருவது ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர். ரோகித் கூட நெதர்லாந்திடம் அரைசதம் விளாசினார், ஆனால் தொடக்க வீரர் என்று சொல்லி கொண்டு இந்திய அணிக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜாக இருக்கும் கேஎல் ராகுல், தொடர்ந்து 3 முறையாக சிங்கிள் டிஜிட்டில் ஆட்டமிழந்து ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.

முதல் ஓவர்

முதல் ஓவர்

பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் 4 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக 9 ரன்கள் என ஆட்டமிழந்த ராகுல், இன்றைய ஆட்டத்திலும் 14 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். பார்னல் வீசிய சாதாரண முதல் ஓவரை தொடக் கூட முடியாத ராகுல், அதில் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை.

ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு

அப்போதே, இன்று இந்தியாவின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களுக்கு ரோகித்தும், ராகுலும் ஒரு குறும் படத்தை பிக் பாஸ் கமல் போல் போட்டு காட்டினர். ராகுல் பேட்டை சுற்ற, அதில் தெரியாமல் ஒரு பந்து பேட்டில் பட்டு, அது சிக்சருக்கு சென்றது. ஆனால் ராகுல் நிகிடி பந்தில் மார்க்ரம் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

உலககோப்பையை வெல்லுமா?

உலககோப்பையை வெல்லுமா?

இதே போன்று ரோகித் சர்மா சிக்சர் அடிக்க முயன்று, பந்தை சரியாக டைமிங் செய்யாத காரணத்தால், அது கேட்ச் ஆனது. இந்தப் போட்டியை பார்த்த பிறகு ஒன்று மட்டும் நிச்சயம். கேஎல் ராகுலுக்கு இப்படி தொடர்ந்து வாய்ப்பு வழங்கினால், இந்தியா டி20 உலககோப்பையை வெல்லும் வாய்ப்பு கொஞ்சம் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, October 30, 2022, 17:55 [IST]
Other articles published on Oct 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+