For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னங்க சொல்றீங்க? வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணாங்க.. ஆசிய கோப்பையில் 2 இந்திய ஸ்டார் வீரர்கள் இல்லை

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இம்மாதம் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபால், ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்த தொடர் நடைபெறுவதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலக கோப்பையில் யார் அணியில் இடம்பெறப் போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் தொடராக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

KL Rahul and Shreyas iyer are going to miss asia cup 2023

இந்திய அணியில் தற்போது மூன்று இடம்தான் பேட்டிங்கில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கில் ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் தங்களுடைய இடத்தை பிடித்துக் கொண்டுள்ளனர். தற்போது இந்திய அணியில் பிரச்சனையே நடு வரிசையிலும் விக்கெட் கீப்பிங் யார் செய்வார்கள் என்பதும் தான். கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் தற்போது காயம் காரணமாக கிரிக்கெட் விளையாட வில்லை.

இதனால் நடுவரிசையில் தற்போது சஞ்சு சாம்சன் சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில் கே எல் ராகுலும் ஸ்ரேயாஸ் ஐயரும் ஆசிய கோப்பை தொடருக்கு இந்திய அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அவர்கள் வந்தவுடன் அணியில் இருக்கும் பேட்டிங் பிரச்சனை தீர்ந்துவிடும் எனும் கூறப்பட்டது. இதற்கு ஏற்றார் போல் ஸ்ரேயாஸ் ஐயரும் கே எல் ராகுலும் தங்களுடைய பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளத்திலும் வெளியானது.

இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இவ்விரு வீரர்களும் விளையாட மாட்டார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இருவரும் காயத்திலிருந்து தங்களுடைய முழு உடல் தகுதியை எட்டுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மாதங்கள் ஆகுமாம்.

இதன் காரணமாக ஆசிய கோப்பை போட்டியில் கே எல் ராகுலும் ஸ்ரேயாஸ் ஐயரும் இடம் பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதே போல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கும் இவர்கள் அணிக்கு திரும்புவது சந்தேகம் என கூறப்படுகிறது.

காரணம் உலகக் கோப்பை தொடர்க்கும் முன்பு தயாராகி விட்டாலும் கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் கிரிக்கெட் விளையாடாமல் இவ்வளவு பெரிய தொடரில் இவ்விரு வீரர்களையும் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் தயாராக இல்லை. இதனால் சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ் ஆகியோரை வைத்து உலகக் கோப்பையை விளையாட இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Story first published: Wednesday, August 2, 2023, 21:47 [IST]
Other articles published on Aug 2, 2023
English summary
KL Rahul and Shreyas iyer are going to miss asia cup 2023 என்னங்க சொல்றீங்க? வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணாங்க.. ஆசிய கோப்பையில் 2 இந்திய ஸ்டார் வீரர்கள் இல்லை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+