சென்னையில் கேஎல் ராகுல் படைக்க போகும் சாதனை.. ஸ்மித்துக்கும் ஒரு வாய்ப்பு.. பதிலடி தருமா இந்தியா
சென்னை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால் இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
சென்னை ஆடுகளம் எப்போதுமே சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் கை ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் கடந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இன்றைய ஆட்டத்தில் கம்பேக் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

சென்னை ஆடுகளம்
குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சென்னை ஆடுகளம் மிகவும் மோசமானதாகவே அமைந்திருக்கிறது. இங்கு அவர் ஒரு முறை கூட அரை சதம் அடித்ததில்லை. சராசரி வெறும் 25க்கு கீழ் உள்ளது. இதனால் சென்னையில் தன்னுடைய தடத்தை ரோகித் சர்மா பதிக்க வேண்டிய நிலையில் உள்ளார். மறுமுனையில் விராட் கோலிக்கு சென்னை ஆடுகளம் சிறப்பாகவே அமைந்திருக்கிறது.

சென்னையில் ஆஸி
இதனால் கோலி இன்றைய ஆட்டத்தில் ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். சூரியகுமார் யாதவ்க்கு இதுதான் கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. ஏனென்றால் தொடர்ந்து இரண்டு முறையாக கோல்டன் டக் ஆனதால் இன்றைய ஆட்டத்திலும் அவர் சொதப்பினால் ஒரு நாள் கிரிக்கெட் பக்கமே வர முடியாத நிலை ஏற்படும். கடைசியாக இங்கு ஆஸ்திரேலியா அணி 2017 ஆம் ஆண்டு விளையாடிய போது தோல்வியை தழுவியது.

கேஎல் ராகுல்
அப்போது சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி இணைந்து ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியது. சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான் மோதியது. இந்தத் தொடரில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி தான் வெற்றி பெற்று வருகிறது. சென்னையில் கடைசியாக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் கூட இரண்டாவது பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி பெரிய இலக்கை இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே இருந்து வெற்றிகரமாக கடந்தது.

டாஸ்
ஆனால் சென்னை வரலாற்றை எடுத்துக் கொண்டால், மொத்தமாக இங்கு நடைபெற்ற 22 ஒரு நாள் போட்டியில் 13 ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணியே வென்றிருக்கிறது. கே எல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 இன்னிங்ஸ் விளையாடி 1954 ரன்கள் அடித்திருக்கிறார். இன்னும் அவர் 46 ரன்கள் சேர்த்தார். அதிவேகமாக 2000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

ஸ்மித்
இதேபோன்று கேப்டன் ஸ்மித் 61 ரன்கள் சேர்த்தால் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஐந்தாயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். மேலும் இந்த மைல் கல்லை அதிவேகமாக எட்டிய இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications