Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டிக்கு கெட்டி மேளம்... திருமண தேதி உறுதியானது.. எங்கு? எப்போது? தெரியுமா?

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் - ஆதியா ஷெட்டி ஆகியோரின் திருமண தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கிரிக்கெட் வீரர்களும், சினிமா நடிகைகளும் காதல்வசப்படுவதும் சகஜமான ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக பாலிவுட் நடிகைகள் குறித்த தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது.

முன்னணி வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்களும், சினிமா நடிகைகளையே திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.

ராகுல் - ஆதியா காதல்

ராகுல் - ஆதியா காதல்

அந்தவகையில் இந்திய அணியின் ஓப்பனிங் வீரரான கே.எல்.ராகுல் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ஆதியா ஷெட்டி ஆகியோர் காதலித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருவர் குறித்து தகவல்கள் மட்டுமே வெளியாகி வந்த சூழலில் சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக தெரியவந்தது. ஆதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். இவர் தமிழில் தர்பார் படத்தில் நடித்திருந்தார். இவர் தான் தனது மகளின் காதல் குறித்து பேசியிருந்தார்.

திருமணம் எப்போது?

திருமணம் எப்போது?

இந்நிலையில் ஆதியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரின் திருமணம் குறித்த தகவலை வெளியிடப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ள கே.எல்.ராகுல் தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்த சமயத்தை பயன்படுத்தி திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி மாதத்தில் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தேதி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

திருமணம் எங்கு

திருமணம் எங்கு

நடிகர் சுனில் ஷெட்டிக்கு மும்பைக்கு அருகே காண்டாலா மேன்ஷன் என்ற பிரமாண்ட வீடு உள்ளது. இந்த இல்லத்தில்தான் கே.எல்.ராகுலின் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திருமணத்திற்கு முன்னதாக கே.எல்.ராகுல் கர்நாடகாவில் உள்ள கூகே சுப்ரமண்யா கோயிலுக்கு சென்று வந்தார். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 ரசிகர்களின் விமர்சனம்

ரசிகர்களின் விமர்சனம்

டி20 உலகக்கோப்பை தொடரில் கே.எல்.ராகுலின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இதற்காக அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வந்த சூழலில் தற்போது அவரின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் வரும் ஜனவரி மாதம் வரும் வங்கதேச சுற்றுப்பயணத்திலும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, November 23, 2022, 18:51 [IST]
Other articles published on Nov 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+