For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேஎல் ராகுல் ஒரு லக்கி கேப்டன் உங்களுக்கு தெரியுமா? மற்ற பேட்ஸ்மேன்களுக்கு தான் லக்.. அவருக்கு இல்லை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக கே எல் ராகுலை தான் பிசிசிஐ அடையாளப்படுத்தி வருகிறது.

ரோகித் சர்மா காயம் ஏற்பட்டு விளையாடாமல் போனால் கே எல் ராகுல் தான் தலைமை பணியை ஏற்று நடத்துகிறார்.

கேஎல் ராகுல் கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறாரோ இல்லையோ அவரது தலைமையில் மற்ற வீரர்களுக்கு சம லக் அடிக்கிறது.

திடீர் அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்டம்

விராட் கோலி எல்லாம் கேப்டனாக இருக்கும்போது அணிக்காக அனைத்து பொறுப்புகளையும் தன் தலையில் போட்டுக் கொண்டு அதிரடியாக ரன்களை குவிப்பார். ஆனால் ராகுல் நெருக்கடி காரணமாக பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்புவார். ஆனால் கே எல் ராகுல் தலைமையில் அதிர்ஷ்டமே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீரர்களுக்கெல்லாம் திடீர் அதிர்ஷ்டம் வருகிறது.

 3 ஆண்டுக்கு பிறகு சதம்

3 ஆண்டுக்கு பிறகு சதம்

உதாரணத்துக்கு விராட் கோலி தன்னுடைய 71 வது சதத்தை அடிக்க முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தார். கடைசியில் கே எல் ராகுல் இந்தியாவிற்கு கேப்டனாக இருந்தபோதுதான் விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தன்னுடைய 71 வது சதத்தை டி20 போட்டியில் பூர்த்தி செய்தார்.இதேபோன்று விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு சதம் விளாசாமல் இருந்த நிலையில், மீண்டும் வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கே எல் ராகுல் கேப்டனாக இருந்த போது தான் விராட் கோலி சதம் அடித்தார்.

சுப்மான் கில்

சுப்மான் கில்

இதேபோன்று இந்திய அணியின் இளம் வீரர் சுப்மான் கில், கே எல் ராகுல் கேப்டனாக இருந்த போது தான் தனது முதல் ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இதேபோன்று கே எல் ராகுல் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தபோதுதான் சுப்மான்க தன்னுடைய அறிமுக சதத்தை பதிவு செய்தார். இந்திய அணியின் அதிரடி வீரர் இசான் கிஷன், தன்னுடைய முதல் சதம் மற்றும் இரட்டை சதத்தை கே எல் ராகுல் தலைமையில் தான் பூர்த்தி செய்தார் .

புஜாரா

புஜாரா

இதேபோன்று டெஸ்ட் போட்டியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சதம் விளாச முடியாமல் புஜாரா திணறி வந்தார். தற்போது கே எல் ராகுல் கேப்டனாக இருக்கும்போது தான் புஜாரா, 4 ஆண்டுகளுக்குப் பிறகு சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இதனால் கே எல் ராகுல் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு லக்கி மேனாக விளங்குகிறார். இதே போல் அவரும் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினால் இன்னும் நன்றாக இருக்கும்.

Story first published: Friday, December 16, 2022, 20:33 [IST]
Other articles published on Dec 16, 2022
English summary
KL Rahul became Lucky Mascot for other Players who scoring century கேஎல் ராகுல் ஒரு லக்கி கேப்டன் உங்களுக்கு தெரியுமா? மற்ற பேட்ஸ்மேன்களுக்கு தான் லக்.. அவருக்கு இல்லை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+