
அபார பந்துவீச்சு
இதனையடுத்து தொடக்க வீரராக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஜோடி களமிறங்கியது. இதில் டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுமையாக விளையாடிய ஸ்மித் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் பெவலியன் திரும்பினார். இதனையடுத்து, அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லாபஸ்சேன் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் அபார கேட்சில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

சுருண்ட ஆஸி
சுழற்பந்துவீச்சாளர்களை அடித்து ஆட முற்பட்ட போது ஹர்திக் பாண்டியா வேகப்பந்துவீச்சாளர்களை பந்துவீச அழைத்தார். ஜோஸ் இங்கிலிஷ் 27 ரன்களிலும், கேமிரான் கிரீன் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாட முற்பட்ட மேக்ஸ்வெல் 8 ரன்களில் நடையை கட்டினார். ஸ்டோனிஸ் 5 ரன்களிலும், வெளியேற, ஆஸ்திரேலிய அணி 188 ரன்களில் சுருண்டது. ஷமி, சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

திணறிய இந்தியா
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. தொடக்க வீரர் இஷான் கிஷன் 3 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் ஆட்டமிழக்க சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக் ஆனார். பொறுப்பாக விளையாடிய சுப்மன் கில்லும் 20 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

காப்பாற்றிய ராகுல்
இதனையடுத்து கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி கவுண்டர் அட்டாக் செய்தார். ஹர்திக் 25 ரன்களில் வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் ராகுல், ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்பாக விளையாடிய ராகுல் 75 ரன்கள் விளாச, ஜடேஜா 45 ரன்கள் சேர்த்தார்.இதன் மூலம் 39.5வது ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications