Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹார்ட்பீட்டை எகிற வைத்த கே எல் ராகுல்.. நொந்து போன ஆஸ்திரேலிய வீரர்கள்.. 2 முறை தப்பிய சம்பவம்

அடிலெய்டு: இந்திய டெஸ்ட் அணியின் புதிய துவக்க வீரராக மாறி இருக்கும் கே எல் ராகுல், ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலான்ட் வீசிய முதல் பந்தில் கேட்ச் கொடுத்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் அவுட் ஆகவில்லை. அதே ஓவரில் மீண்டும் ஒருமுறை கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார் கே எல் ராகுல். இதை அடுத்து ஆஸ்திரேலியா வீரர்கள் நொந்து போனார்கள்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடந்து வருகிறது. இது பகல் - இரவு டெஸ்ட் போட்டி ஆகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மிட்செல் ஸ்டார்க் முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் "எல் பி டபிள்யூ" (LBW) முறையில் டக் அவுட் ஆனார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

அதன் பின் மூன்றாம் வரிசையில் இறங்கிய சுப்மன் கில் மற்றும் துவக்க வீரர் கே எல் ராகுல் இணைந்து நிதானமாக ரன் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் முதல் ஆறு ஓவர்களை வீசி இருந்த நிலையில் ஸ்காட் போலான்ட் ஏழாவது ஓவரை வீச வந்தார்.

அவர் ஜோஷ் ஹேசல்வுட்டுக்கு பதிலாக அணியில் இடம் பெற்று இருந்தார். இந்த போட்டியில் அவர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். கே எல் ராகுல் அவுட் ஆகிவிட்டார் என அனைவரும் நினைத்து இருந்த நிலையில் அம்பயர் நோ பால் என அறிவித்தார்.

ஸ்காட் போலான்ட் கிரீஸின் நுனியில் காலை தள்ளி வைத்திருந்தார். அதனால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. எனவே, கே எல் ராகுல் அவுட் ஆவதில் இருந்து நூலிழையில் தப்பினார். அடுத்து அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் கே எல் ராகுல் மீண்டும் பந்தை எட்ஜ் செய்தார்.

பவுன்ஸ் ஆகி வந்த பந்தை அவர் அடிக்க முயன்று இவ்வாறு எட்ஜ் செய்தார். முதல் ஸ்லிப்பில் நின்று இருந்த உஸ்மான் கவாஜா பந்தை பிடிக்க முயன்றும் அது நழுவிப் போனது. அதனால் கே எல் ராகுல் மீண்டும் அவுட் ஆவதில் இருந்து தப்பினார். ஒரே ஓவரில் இரண்டு முறை கே எல் ராகுல் தப்பியதை பார்த்த ஆஸ்திரேலிய வீரர்கள் நொந்து போனார்கள்.

இந்த இரண்டு முறையும் கே எல் ராகுல் தப்பிய போது ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ராகுல் 37 ரன்கள் எடுத்த பின் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியது. அந்த அணி வரிசையாக விராட் கோலி மற்றும் சுப்மன் கில் விக்கெட்களை வீழ்த்தியது. இந்திய அணி 81 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

Story first published: Friday, December 6, 2024, 11:52 [IST]
Other articles published on Dec 6, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+