Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திடீரென இப்படியா செய்வது? 2வது டெஸ்ட் போட்டி.. கே.எல்.ராகுலின் நடவடிக்கையால் இந்திய அணியில் குழப்பம்

டாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய வீரர் கே.எல்.ராகுல் செய்துள்ள விஷயத்தால் அணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா - வங்கதேச அனிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 22ம் தேதியன்று நடைபெறவுள்ளது. தாக்காவில் உள்ள ஸ்ரீ பங்ளா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்று முன்னிலை கண்டுள்ளது. 2வது போட்டியிலும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்ய இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இந்நிலையில் பயிற்சியின் போது கேப்டன் கே.எல்.ராகுல் மட்டும் அறைக்கு செல்லாமல் நீண்ட நேரமாக மைதானத்திலேயே இருந்தது தெரியவந்துள்ளது. ரோகித் சர்மா இல்லாததால் கேப்டன்சி பொறுப்பை ஏற்ற ராகுல், சரியான ஃபார்மில் இல்லாமல் சொதப்பி வருகிறார். முதல் டெஸ்டில் 2 இன்னிங்ஸையும் சேர்த்தே 45 ரன்களை மட்டுமே அடித்தார்.

பெரும் குழப்பம்

பெரும் குழப்பம்

ஆனால் மற்றொருபுறம் ரோகித் சர்மாவின் இடத்தில் விளையாடிய சுப்மன் கில் சதமடித்து தனது ஃபார்மை நிரூபித்துள்ளார். எனவே 2வது டெஸ்டில் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடினால் மட்டுமே அவரின் இடம் உறுதியாகும். இல்லையெனில் கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பியவுடன் சுப்மன் கில் ஆ? கே.எல்.ராகுலா? என்று வருகையில் அதிரடி முடிவு எடுக்க வேண்டியிருக்கும். இதனை பிசிசிஐ-யே கூறியுள்ளதாக தெரிகிறது.

பிட்ச்-ன் ஆராய்ச்சி

பிட்ச்-ன் ஆராய்ச்சி

இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கே.எல்.ராகுலுக்கு ஸ்பெஷல் பேட்டிங் பயிற்சியை கொடுத்து வருகிறார். தாக்கா பிட்ச்-ன் தன்மையை ஆராய்ந்து பார்த்துள்ள ராகுல் டிராவிட், அங்கு எந்த வகையில் பேட்டிங் செய்தால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியும் என்ற திட்டத்தை ராகுலிடம் பகிர்ந்துக்கொண்டுள்ளார். எனவே கே.எல்.ராகுல் - சுப்மன் கில் இடையேயான போட்டியை காண எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்.

கட்டாய வெற்றி

கட்டாய வெற்றி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நுழைய வேண்டும் என்றால் இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. அதன்படி முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் 4வது இடத்தில் இருந்த இந்திய படை 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அசைக்க முடியாத இடத்தை பெற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 20, 2022, 17:51 [IST]
Other articles published on Dec 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+