Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புஜாராவின் கையில் இந்திய அணியின் கேப்டன்சி.. டெஸ்ட் அணியில் என்ன நடக்கிறது?..கே.எல்.ராகுல் விளக்கம்

சட்டாகிராம்: இந்திய அணியின் துணைக்கேப்டனாக சட்டீஸ்வர் புஜாரா நியமிக்கப்பட்டது குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம் அளித்துள்ளார்.

வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 -1 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ம் தேதியன்று சட்டாகிரோம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

இந்திய அணியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா என மூன்று முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக அபிமன்யூ ஈஸ்வர், நவ்தீப் சைனி, சௌரப் குமார் ஆகிய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புஜாராவுக்கு கேப்டன்சி

புஜாராவுக்கு கேப்டன்சி

இந்நிலையில் டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக சட்டீஸ்வர் புஜாரா அறிவிக்கப்பட்டுள்ளது தான் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. எதிர்கால கேப்டன்களாக பார்க்கப்படும் ரிஷப் பண்ட் அணியில் இருக்கும் போது புஜாராவுக்கு ஏன் கேப்டன்சி தர வேண்டும் என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால் இந்த வங்கதேச தொடரே புஜாராவுக்கு கடைசி வாய்ப்பு போன்றது தான். தொடர் சொதப்பல்களால் அவரின் இடம் ஆபத்தில் உள்ளது.

கேப்டன் விளக்கம்

கேப்டன் விளக்கம்

இதுகுறித்து கே.எல்.ராகுல் விளக்கம் அளித்துள்ளார். அதில், கேப்டன்சிக்கான தகுதிகள் குறித்து எனக்கே தெரியாது. யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரின் முதுகில் பொறுப்புகள் குவிகின்றன. நான் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்ட போதும் மகிழ்ச்சி ஒருபக்கம், பொறுப்புகள் ஒருப்பக்கம் என்று தான் இருந்தது. இதனால் சிறப்பாக விளையாடியே ஆக வேண்டும் என்ற எண்ணம் வருமே தவிர சவால்கள் பெரிதாக இருக்காது. ஏனென்றால் அணியில் ஒவ்வொரு வீரருக்கும் அவர்களின் பணிகள் என்னவென்பது குறித்து தெரியும்.

மிகச்சிறப்பான வீரர்கள்

மிகச்சிறப்பான வீரர்கள்

ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா ஆகிய இருவருமே மிகச்சிறப்பான வீரர்கள். பல சமயங்களில் வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளனர். புஜாரா அணியின் பொறுப்புகளை எடுத்து விளையாட வேண்டும் என நினைப்பவர் தான். அதற்கு நாங்களும் ஒத்துழைத்து செல்வோம் என கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார். கேப்டன்சி பொறுப்பு இருந்தாலாவது புஜாரா நல்ல ஃபார்முடன் கம்பேக் தருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Monday, December 12, 2022, 15:22 [IST]
Other articles published on Dec 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+