கேஎல் ராகுலுக்கு அடிச்ச செம லக்.. சாதகமான சூழல்..இங்கிலாந்து பாணியை கையில் எடுக்குமா இந்தியா?
சட்டோகிராம் : வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது.
7 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேச மண்ணில் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. மைக்கேல் கணித்த படியே கேஎல் ராகுல், பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளார்.
இதே போன்று சுப்மான் கில்லுக்கு காயம் ஏற்பட்டதாக அஞ்சப்பட்டது. எனினும் அவர் முழு உடல் தகுதியுடன் முதல் ஆட்டத்தில் களமிறங்குகிறார்.

ஆடுகளம் எப்படி?
சாஹூர் அகமது சௌத்ரி மைதானம், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. இங்கு வேகப்பந்துவீச்சாளர்களை விட சுழற்பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடைசி 5 டெஸ்டில் இங்கு 97 விக்கெட்டுகளை அதிகபட்சமாக சுழற்பந்துவீச்சாளர்கள் தான் எடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கு சாதகம்
இதனால், தற்போது டாஸ் வென்று இந்தியா முதலில் பேட்டிங் செய்துள்ளதால், இந்தியாவுக்கு தான் சாதகம் ஏற்பட்டுள்ளது. காரணம், முதல் 2 நாட்களுக்கு பேட்டிங் சாதகமான சூழலும், கடைசி 2 நாட்ககள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். இதன் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்சில் அதிக ரன்களை குவித்து வங்கதேசத்திற்கு நெருக்கடி தர முடியும்.

கேப்டன்கள் கருத்து
மேலும் மைக்கேல் கணித்த படியே இந்திய அணி 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கி உள்ளது. அஸ்வின், அக்சர் பட்டேல் , மற்றும் குல்தீப் யாதவ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டாஸ் வென்றது குறித்து பேசிய கேஎல் ராகுல், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ரன் குவித்து , வங்கதேசத்திற்கு நெருக்கடி கொடுப்போம் என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய ஷகிபுல் ஹசனும், நாங்களும் முதுலில் பேட்டிங் தான் தேர்வு செய்து இருப்போம் என்று கூறினார்.

பிளேயிங் லெவன்
1. கேஎல் ராகுல், 2, சுப்மான் கில், 3, புஜாரா, 4, விராட் கோலி, 5, ஸ்ரேயாஸ் ஐயர், 6, ரிஷப் பண்ட், 7, அஸ்வின், 8, அக்சர் பட்டேல், 9, குல்தீப் யாதவ், 10, உமேஷ் யாதவ், 11, முகமது சிராஜ்


Click it and Unblock the Notifications