Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிங்கம் களமிறங்கிடுச்சுங்கோ... இனிமே தடுத்து நிறுத்துறது கஷ்டம்தான்!

புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி புனேவின் எம்சிஏ மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் தவிர்த்து அனைத்து வீரர்களும் சிறப்பாக ரன்களை குவித்தனர்.

கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாத கேஎல் ராகுல் இந்த போட்டியில் சதமடித்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

2வது ஒருநாள் போட்டி

2வது ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்றைய தினம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த போட்டியில் 98 ரன்களை அடித்த ஷிகர் தவான் 4 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்த வீரர்கள் அனைவரும் தங்களது பொறுப்பையுணர்ந்து செயல்பட்டனர்.

ஒருநாள் போட்டிகளில் 5வது சதம்

ஒருநாள் போட்டிகளில் 5வது சதம்

குறிப்பாக கேஎல் ராகுல் இந்த போட்டியில் சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த 2016ல் ஜிம்பாப்வேக்கு எதிரான தனது ஒருநாள் போட்டிகளின் அறிமுக போட்டியில் களமிறங்கி விளையாடிய அவர் தற்போது இந்த போட்டியில் தான் அடித்துள்ள சதத்தையடுத்து ஒருநாள் தொடர்களில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

ரன் மழை பொழிந்த ராகுல்

ரன் மழை பொழிந்த ராகுல்

இன்றைய போட்டியில் விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோருடன் அடுத்தடுத்த பார்ட்னர்ஷிப்பை அமைத்து ராகுல் சிறப்பாக விளையாடினார். ரன் மழையை பொழிந்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸ்களும் அடக்கம். கடந்த 2020 ஆஸ்திரேலிய தொடரிலிருந்து மிடில் ஆர்டரில் ராகுல் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 அரைசதத்தையும் 2 சதங்களையும் அடித்துள்ளார்.

114 பந்துகள்... 108 ரன்கள்

114 பந்துகள்... 108 ரன்கள்

இந்த போட்டியில் 37 ரன்கள் இருக்கும்போது களமிறங்கிய கேஎல் ராகுல், தன்னுடைய அபாரமான ஆட்டத்தின் மூலம் 114 பந்துகளில் 108 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியுள்ளார். கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாமல் மோசமான விமர்சனங்களை பெற்ற ராகுல் தற்போது இந்த தொடரின் இரு போட்டிகளில் தன்னுடைய ஆட்டத்தின்மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Friday, March 26, 2021, 17:43 [IST]
Other articles published on Mar 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+