ஆரம்பத்திலேயே இப்படி ஒரு கண்டமா? தேவையான வீரர்கள் இல்லாமல் தவிக்கும் இந்தியா.. குழம்பும் ராகுல்!!
சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள சாகூர் அகமது மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 1 என தோல்வியடைந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பதிலடி கொடுத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணி
இந்நிலையில் இந்த முக்கியமான போட்டியில் இந்திய ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் ஒரு சிக்கல் உண்டாகியுள்ளது. பேட்டிங்கில் எந்த பிரச்சினையும் இல்லை. ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகியோர் உள்ளனர். மிடில் ஆர்டரில் விராட் கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் என முதல் 6 இடங்களும் பலமான படையாக உள்ளது. மீதமுள்ள 5 இடங்களில் பவுலர்களை பொருத்துவது தான் சிக்கல் உள்ளது.

ஸ்பின்னர்களுக்கு சாதகம்
போட்டி நடைபெறும் ஜாகீர் அகமது மைதானம் ஸ்பின்னர்களுக்கு தான் பெரியளவில் சாதகமாக இருக்கும். வரலாற்றில் இதுவரை ஸ்பின்னர்களே இங்கு அதிக விக்கெட்களை எடுத்துள்ளனர். எனவே 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியே தீர வேண்டும். முன்னணி வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல் என மூன்று பேர் இருக்கின்றனர்.

இரண்டே இடங்கள் தான்
3 ஸ்பின்னர்களை தேர்வு செய்தால் மீதமுள்ள 2 இடங்கள் தான் வேகப்பந்துவீச்சுக்கு இருக்கும். அதில் சீனியர் வீரரான உமேஷ் யாதவ் நிச்சயம் இடம் பெறுவார். மற்றொரு இடத்தில் முகமது சிராஜ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இப்படி நடந்தால் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என ஒருவர் ப்ளேயிங் 11ல் இருக்கவே மாட்டார்.

ஷர்துலின் எண்ட்ரி
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான களங்களில் நல்ல ஆளமான பேட்டிங் ஆர்டரை வைத்திருக்க வேண்டும். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இல்லாததால் ஷர்துல் தாக்கூர் தான் அதற்கான தேர்வாக இருக்கிறார். ஆனால் அவரை சேர்த்தால் முகமது சிராஜை நீக்க வேண்டிய சூழல் உருவாகும். அல்லது ஸ்பின்னர்களில் ஒருவரை நீக்க வேண்டியிருக்கும். இதனாலும் அணியின் காம்பினேஷன் பாதிக்கப்படும். இதை கே.எல்.ராகுல் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications