For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு திரும்பும் கேஎல் ராகுல்.. எப்போது விளையாடுவார்? முக்கிய அப்டேட் வெளியானது

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் காயம் குறித்து முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல் , நடப்பாண்டில் மட்டும் 3 முறை காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து கேஎல் ராகுல் உடல் நிலை குறித்து ஆராய்ந்து, சிகிச்சை அளிக்க பிசிசிஐ அவரை வெளிநாட்டுக்கு அனுப்பியது.

ராகுல் காயம்

ராகுல் காயம்

இதனால் கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரில் 350 ரன்களுக்கு மேல் அடித்த கேஎல் ராகுல் தற்போது இம்முறை இடம்பெறவில்லை. தற்போது ஜெர்மனி சென்றுள்ள கேஎல் ராகுலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டது. இதனால் 4 மாதங்கள் ராகுல் ஓய்வில் இருப்பார் என்பதால், டி20 உலககோப்பையில் பங்கேற்பது சந்தேகமானது.

கடினமான வாரங்கள்

கடினமான வாரங்கள்

இதனிடையே, கேஎல் ராகுல் தனது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2 வாரம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றி அடைந்துவிட்டது. தற்போது காயம் குணமடைந்து வருகிறது. உடல் நலம் தேறி வருகிறேன்.

45 நாட்கள் ஓய்வு

45 நாட்கள் ஓய்வு

உடல் தகுதியை மீட்கும் பயணம் இன்றுடன் தொடங்கி வருகிறது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. விரைவில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் கேஎல் ராகுல் முழு உடல் தகுதியை பெற 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இங்கிலாந்து தொடர் ,வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ராகுல் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

தற்போது கேஎல் ராகுல், ஆசிய கோப்பை டி20 தொடரில் குறிவைத்து , அந்த தொடரில் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஎல் ராகுல் இல்லாத தொடரில், அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோர் பங்கேற்பார் என தெரிகிறது. இதனால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுல் இடம்பெறுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.

Story first published: Thursday, June 30, 2022, 12:27 [IST]
Other articles published on Jun 30, 2022
English summary
KL Rahul injury update – surgery in Germany is succesfull இந்திய அணிக்கு திரும்பும் கேஎல் ராகுல்.. எப்போது விளையாடுவார்? முக்கிய அப்டேட் வெளியானது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+