துபாய் : ஆசிய கோப்பை தொடரில் ஹாங்காங்க்கு எதிரான ஆட்டத்தில் கேஎல் ராகுல் ஆடிய விதம் ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.
ஆடுகளம் தொய்வாக இருந்ததால் பந்து பேட்டிற்கு வரவில்லை. இதனால் இந்திய அணி வீரர்கள் கொஞ்சம் சிரமப்பட்டது உண்மை தான்.
ஆனால், அதனை ஒரு காரணமாக ஆசிய கோப்பை தொடரில் சொல்ல முடியாது அல்லவா. கடினமான ஆடுகளத்திலும் ரோகித் பவுண்டரியை விளாசினார்.

அவ்வளவு ஏன் கேஎல் ராகுலும் 2 சிக்சர் விளாசினார். அப்போது சிக்சர், பவுண்டரி அடிக்க முடியாத ஆடுகளம் என்று சொல்ல முடியாது. ஆனால், ரன் அடிக்கும் வழியை கண்டுபிடிக்காமல் கேஎல் ராகுல் ஒருநாள், டெஸ்ட் இன்னிங்சில் ஆடுவது போல் டி20 கிரிக்கெட்டில் விளையாடி இருப்பது தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
கத்துக்குட்டி அணியான ஹாங்காங்க்கு எதிராகவே 39 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் என்றால், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டால் என்ன நிலைமை ஆகும். இது இந்திய அணிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் தான் கேஎல் ராகுல் தற்போதைய ஃபார்மில் டி20 அணியில் இந்திய அணிக்கு தேவையில்லாத சுமையாக இருக்கிறார். ஆனால் பிசிசிஐ , தேர்வுக்குழுவும் அவர் தான் 36 ரன்கள் எடுத்துவிட்டாரே என்று சொல்லி,அணியில் நிரந்திர இடம் வழங்கிவிடும்.