Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் தொடர்ந்து ரோகித்தோட துவக்க வீரராவே விளையாடுவாரு.. அதுல மாற்றமில்ல... பின்நிற்கும் விராட் கோலி!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

Recommended Video

8 விக்கெட் வித்தியாசத்தில் India-வை வீழ்த்திய England.. தொடரிலும் முன்னிலை

நேற்றைய 3வது போட்டியின் வெற்றி மூலம் இதில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியாவை முந்தியுள்ளது இங்கிலாந்து அணி

நேற்றைய போட்டில் துவக்க வீரர் கேஎல் ராகுல் டக்-அவுட் ஆகியுள்ளார். தொடர்ந்து விளையாடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் அவர் டக்-அவுட் ஆகியுள்ளார்.

இங்கிலாந்து அபார வெற்றி

இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் 3வது போட்டி நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வகையில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை முந்தியுள்ளது.

ராகுல் டக் -அவுட்

ராகுல் டக் -அவுட்

நேற்றைய தினம் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கி விளையாடினர். ஆனால் கேஎல் ராகுல் மார்க் வுட் பௌலிங்கில் டக்-அவுட் ஆனார். இந்த தொடரின் முதல் போட்டியில் ஒரு ரன்னும் அடுத்தடுத்த போட்டிகளில் டக்-அவுட்டும் ஆகியுள்ளார் கேஎல் ராகுல்.

3 டக்-அவுட்கள்

3 டக்-அவுட்கள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி உள்ளிட்ட தொடர்ந்து அவர் ஆடியுள்ள 4 டி20 போட்டிகளில் கேஎல் ராகுல் 3 போட்டிகளில் டக்-அவுட் ஆகியுள்ளது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேஎல் ராகுல் ஒரு சாம்பியன் வீரர் என்று கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

துவக்க வீரராக விளையாடுவார்

துவக்க வீரராக விளையாடுவார்

நேற்றைய போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, கே எல் ராகுல் அணியின் முக்கிய வீரராக தொடர்வார் என்றும் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களமிறங்கி விளையாடுவார் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் 77 ரன்களை விராட் கோலி குவித்த போதிலும் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

Story first published: Wednesday, March 17, 2021, 22:52 [IST]
Other articles published on Mar 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+