Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கே.எல்.ராகுலை விட்டு விளாசும் ரசிகர்கள்..!! இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

பயிற்சியாளராக ராகுல் டிராவிட்க்கு நிகழ்ந்த முதல் அக்னி பரீட்சை இது. இதில் டிராவிட் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை

அனுபவம் இல்லாத கேப்டன், சீனியர் வீரர்கள் இல்லாதது , கேப்டன்கள் மாற்றம் ஆகியவை சிக்கலை மேலும் அதிகரித்தது.

 பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது இந்திய அணி பேட்டிங் வரிசையில் செய்த மாற்றம் பலன் அளிக்கவில்லை. அதிரடி வீரர் ரிஷப் பண்ட் 6வது வீரராக களமிறங்க கூடியவர். போட்டியை முடித்து கொடுக்கும் ஃபினிஷர். ஆனால் அவரை நடுவரிசையில் 4வது வீரராக களமிறக்கியதால், கீழ்வரிசையில் ஒரு பேட்ஸ்மேன் இல்லாமலே இந்தியா விளையாடியது

 சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ் பேட்டிங் வரிசையில் 4வது வீரராக இறங்கி அதிரடியாக ஆடக் கூடியவர். ஆனால் அவருக்கு முதல் 2 போட்டியில் வாய்ப்பே தரவில்லை. கடைசி போட்டியில் அளித்தும், அவரை 6வது வீரராக இறக்கியது பெரும் தவறாக பார்க்கப்படுகிறது. இதே போன்று ஸ்ரேயாஸ் ஐயர் கிடைத்த வாய்ப்பை வீணடித்ததும் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது

 தொடக்க வீரர்

தொடக்க வீரர்

விராட் கோலி தலைமையிலான அணியில் கே.எல். ராகுலுக்கு நடுவரிசையில் தான் இடம் கிடைத்தது. அதிலும் அவர் சிறப்பாக விளையாடினார். தற்போது ரோகித் சர்மா இல்லை என்றால் அந்த இடத்தில் மற்றொரு தொடக்க வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு தான் வாய்ப்பு தந்து, ராகுல் நடுவரிசையில் விளையாடி இருக்க வேண்டும். ஆனால் தொடக்க வீரராக தான் களமிறங்குவேன் என்று விளையாடிய ராகுல் பெரியதாக சாதிக்கவில்லை

 ஆல் ரவுண்டர்

ஆல் ரவுண்டர்

அணியின் பந்துவீச்சு ஒருநாள் தொடர் தோல்விக்கு மிகப் பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஜடேஜா போல் ஒரு ஆல்ரவுண்டர் இல்லாமல் போனது நிச்சயம் அணிக்கு பாதகமாக அமைந்தது. புவனேஸ்வர் குமாருக்கு 2வது போட்டியில் வாய்ப்பு அளித்திருக்க கூடாது. ஆனால் செய்த தவறை 3வது போட்டியில் சரி செய்து புதிய பந்துவீச்சாளர்களை ராகுல் தேர்வு செய்தார். இது நல்ல மாற்றத்தை தந்தது.

Recommended Video

மோசமாக தடுமாறிய Indian Team.. களத்தில் இறங்கிற Virat Kohli.. தலைகீழாக மாறிய போட்டி
 முதல் கேப்டன்

முதல் கேப்டன்

பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவிட்டது, பார்ட்னர்ஷிப்பை உடைக்க தவறியது, மேட்ச் சூழலுக்கு ஏற்ப யுத்தியை மாறறாமல் விட்டது. பேட்டிங் வரிசையில் குளறுபடி என்று முதல் தொடரிலே ராகுல் பல தவறுகளை செய்துவிட்டார். 1960ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் 4 போட்டியில் தோல்வியை தழுவிய ஒரே இந்திய கேப்டன் என்ற சோகத்தை ராகுல் படைத்துள்ளார். கேப்டன்ஷிப் சுமை அவரது ஆட்டத்தை பாதித்தது. இதனால் ராகுலை, CLOWN ராகுல் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்

Story first published: Monday, January 24, 2022, 19:24 [IST]
Other articles published on Jan 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+