Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 33 ரன் எடுத்தால் கே.எல். ராகுல் மாபெரும் சாதனை.. விராட் கோலியின் சாதனைக்கு ஆபத்து

மும்பை: விராட் கோலியின் டி20 சாதனையை கே.எல். ராகுல் முறியடிக்க இருக்கிறார். இன்னும் 33 ரன்கள் எடுத்தால், விராட் கோலியின் மைல்கல் சாதனை ஒன்றை கே.எல். ராகுல் எட்டுவார். டி20 போட்டியில் 8000 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மட்டுமே ஒரே இந்தியராக இருக்கிறார். தற்போது கே.எல். ராகுல் 33 ரன்கள் எடுத்தால், விராட் கோலியின் அந்த மைல்கல் சாதனையை எட்டுவார்.

மேலும், விராட் கோலியை விட குறைந்த இன்னிங்ஸ்களில் 8000 டி20 ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையையும் கே.எல். ராகுல் படைப்பார். விராட் கோலி 243 இன்னிங்ஸ்களில் 8000 டி20 ரன்கள் எடுத்திருக்கிறார். தற்போது கே.எல். ராகுல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வரவிருக்கும் ஐபிஎல் போட்டியில் 33 ரன்கள் எடுத்தால், 224 இன்னிங்ஸ்களிலேயே அந்த மைல்கல்லை எட்டி, விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார்.

KL Rahul Nears 8000 T20 Runs Set to Break Virat Kohli s Indian Record

மேலும், சர்வதேச அளவில் விரைவாக 8000 டி20 ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் ராகுல் மூன்றாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த பட்டியலில் பாபர் அசாம் 218 இன்னிங்ஸ்களில் 8000 டி20 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 213 இன்னிங்ஸ்களில் 8000 டி20 ரன்கள் எட்டி சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சாதனைகளையும் கே.எல். ராகுல் தவற விட்டு இருக்கிறார்.

கே.எல். ராகுலை பலரும் சிறந்த டி20 பேட்ஸ்மேனாகக் கருதாத நிலையில், அவர் இந்த இமாலய மைல்கல் சாதனையைச் செய்ய இருக்கிறார். இதன் மூலம் தன்னை விமர்சித்து வருபவர்களுக்கு அவர் பதிலளிக்கப் போகிறார். 2025 ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் இதுவரை 381 ரன்களை எடுத்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 47.63 என்பதாக உள்ளது. அவரது ஸ்ட்ரைக் ரேட் 142.63 என்பதாக உள்ளது. கடந்த ஆண்டு கே.எல். ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அவர் இந்த ஆண்டு அதிரடியாக விளையாடி பதிலடி அளித்திருக்கிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரஷித் கான், கே.எல். ராகுலுக்குச் சிக்கலை ஏற்படுத்துவார் என்ற ஒரு பார்வையும் உள்ளது. இதற்கு முன் மூன்று முறை ரஷித் கான், கே.எல். ராகுல் விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். மேலும், ரஷித் கானின் பந்துவீச்சில் கே.எல். ராகுல் இதுவரை 47 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். எனவே, ரஷித் கானைச் சந்திக்கும் போது கே.எல். ராகுல் கவனமாக இருக்க வேண்டும்.

Story first published: Sunday, May 18, 2025, 11:23 [IST]
Other articles published on May 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+