கொழும்பு : இந்திய கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு பல கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி இருந்த கே எல் ராகுல் தற்போது காயத்திலிருந்து திரும்பி வந்த பிறகு வேறொரு வீரராக திகழ்கிறார்.
பேட்டிங்கில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் இன்று இலங்கைக்கு எதிராகவும் முக்கியமான ஆட்டத்தை கே எல் ராகுல் விளையாடினார். இந்த நிலையில் விக்கெட் கீப்பிங்கிலும் கே எல் ராகுல் சிறப்பாக செயல்பட்டார்.

கேட்ச் பிடிப்பது,ஸ்டெம்பிட் செய்வது என கே எல் ராகுல் என்று அசத்தினார். டி ஆர் எஸ் முடிவு எடுப்பதிலும் கே எல் ராகுல் இன்று பிரமாதமாக செயல்பட்டார். எனினும் அவர் பேச்சைக் கேட்காமல் ரோகித் சர்மா எடுத்த drs முடிவு தோல்வியில் முடிந்தது. எப்போதுமே தோனி, குல்தீப் பந்து வீசும் போது தன்னுடைய ஐடியாவை கூறுவார். அதன்படி செயல்படும் போது பல விக்கெட்டுகள் கிடைக்கும். தற்போது தோனி இல்லாத நிலையில் கே எல் ராகுல் அதேபோல் செயல்பட்டு குல்தீப்க்கு ஒரு விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களும் பேசிய கே எல் ராகுல் இன்றைய ஆட்டம் மிகவும் சிறப்பாக அமைந்தது. எங்களுடைய நம்பிக்கையை நாங்கள் கைவிடாமல் தொடர்ந்து விளையாடினோம். நாங்கள் நூறு ஓவர்கள் தொடர்ந்து ஆடுகளத்தில் நிற்கவில்லை. ஆனால் எத்தனை ஓவர்கள் மூன்று நாட்களாக விளையாடினோம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் உடல் அளவில் எங்களுக்கு பல சோதனைகளை கொடுத்தது. எனினும் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
இடைவெளியே இல்லாமல் நாங்கள் ஒரு அணியாக விளையாடி வெற்றியை பெற்று இருப்பது நிச்சயம் பாராட்டத்தக்கது. அணிக்காக நான் எப்போதுமே பங்களிப்பை அளிக்கும்போது எனக்கு திருப்தியாக இருக்கும். நடுவரிசையில் விளையாடும் போது நீங்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பது மிகவும் முக்கியம். நான் நான்கு முதல் ஐந்து மாதம் வரை காயம் காரணமாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
இதனால் எனக்கு என்ன வாய்ப்பு கிடைக்கிறதோ அதை எல்லாம் நான் பயன்படுத்த விரும்புகிறேன். இசான் கிஷனுடன் நான் அமைத்த பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் 20 முதல் 30 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். இன்னும் ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் கூடுதலாக ரன்கள் சேர்த்து இருப்போம்.
ஸ்டெம்புக்கு பின்னால் இருக்கும்போது ஆட்டத்தில் என்ன நடக்கிறது பேட்ஸ்மேன் என்ன செய்கிறார் என்பதெல்லாம் உங்களுக்கு புரியும். அதை தான் நான் குல்தீப் யாதவிடம் கூறினேன். அதிர்ஷ்டவசமாக அது அவருக்கு உதவியது .எனினும் இந்த பாராட்டை நான் அவரிடம் இருந்து பறித்துக் கொள்ள மாட்டேன். ஏனெனில் நான் சொன்னதை சரியாக செய்வதற்கு அவர் திறமை தான் பயன்பட்டது என்று கே எல் ராகுல் கூறினார்.