Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய போட்டியில் தொடர்ந்து சொதப்பும் ராகுல்.. நொந்து நூடுல்ஸ் ஆன ரசிகர்கள்..பிசிசிஐக்கு தேவையா இது

ஐதராபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் மீண்டும் சொதப்பினார்.

தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேமிரான் கிரின் 19 பந்துகளில் இரைசதம் விளாசினார்.

இறுதியில் டிம் டேவிட் அரைசதம் அடிக்க, 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 186 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

187 ரன்கள் இலக்கு

187 ரன்கள் இலக்கு

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. பவர்பிளேவில் விக்கெட்டுகளை கொடுக்காமல் அதிரடியாக விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால் இது போன்ற முக்கிய ஆட்டத்தில் கேஎல் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருவது இந்திய அணிக்கு நெருக்கடியை தான் தருகிறது.

தொடர்ந்து சொதப்பல்

தொடர்ந்து சொதப்பல்

குறிப்பாக டி20 உலககோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் சொதப்பினார். இதே போன்று ஆசிய கோப்பை தொடரிலும் பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனாலேயே இந்திய அணி நல்ல தொடக்கம் கிடைக்காமல் தோற்றது.

1 ரன்னில் அவுட்

1 ரன்னில் அவுட்

முக்கிய போட்டிகளில் கம்பி நீட்டும் ராகுல், சாதாரண ஆட்டத்தில் பொளந்து கட்டுகிறார். இதன் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தொடர்ந்து காப்பாற்றி கொள்கிறார். இன்றும் தேவையில்லாத ஷாட் ஆடி ராகுல் 1 ரன்னில் வெளியேறினார். இதனால் பின்னால் வரும் வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

இதன் மூலம் நெருக்கடியான போட்டியில் ராகுல் தொடர்ந்து சொதப்புகிறார். இதனால், நாக் அவுட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் ராகுலை நம்ப கூடாது என்ற நிலைக்கு ரசிகர்களும் வந்துவிட்டனர். ஆனால் பிசிசிஐ இன்னும் திருந்த வில்லை. இதற்கு ஷிகர் தவானாவது முக்கிய ஆட்டத்தில் இந்தியாவை காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Story first published: Sunday, September 25, 2022, 21:56 [IST]
Other articles published on Sep 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+