Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எலிகளுக்கு முன்னால் புலி.. புலிகளுக்கு முன்னால் எலி.. நெதர்லாந்துக்கு எதிரே பலத்தை காட்டும் ராகுல்

சிட்னி : டி20 உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சொதப்பிய கேஎல் ராகுல், நாளை கத்துக்குட்டி அணியான நெதர்லாந்துக்கு எதிரே தனது பலத்தை காட்டப் போகிறார்.

முக்கிய போட்டிகளில் சொதப்பும் ராகுல், மற்ற போட்டிகளில் தனது இன்னொரு முகத்தை காட்டுவார். இதே போன்று பெரிய அணிகளுக்கு எதிரே எலி போல் இருக்கும் ராகுல், சிறிய அணிகளை வெளுத்து வாங்குவார்.

கேஎல் ராகுல் ஐசிசி, ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் கத்துக்குட்டிகளுக்கு எதிராகவும், பெரிய அணிக்கு எதிராகவும் எப்படி விளையாடி இருக்கிறார் என்பதை தற்போது காணலாம்.

ராகுல் Vs பெரிய அணிகள்

ராகுல் Vs பெரிய அணிகள்

இலங்கைக்கு எதிராக 17 பந்தில் 18 ரன், பாகிஸ்தானுக்கு எதிராக 8 பந்தில் 3 ரன், நியூசிலாந்துக்கு எதிராக 16 பந்தில் 18 ரன், பாகிஸ்தானுக்கு எதிராக கோல்டன் டக், மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிராக 20 பந்தில் 28 ரன்கள், இலங்கைக்கு எதிராக 7 பந்தில் 6 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 8 பந்தில் 4 ரன்கள் என சொதப்பி இருக்கிறார்.

ராகுல் Vs சிறிய அணிகள்

ராகுல் Vs சிறிய அணிகள்

அதுவே சிறிய அணிகளான வங்கதேசத்துக்கு எதிராக 14 பந்தில் 24 ரன்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 48 பந்தில் 69 ரன்கள், ஸ்காட்லாந்துக்கு எதிராக 19 பந்தில் 50 ரன்கள், நமிபியாவுக்கு எதிராக 36 பந்தில் 54 ரன்கள், ஹாங்காங்க்கு எதிராக 39 பந்தில் 36 ரன்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 41 பந்தில் 62 ரன்கள் என பட்டையை கிளப்பி இருக்கிறார்.

ராகுல் வேண்டாம்

ராகுல் வேண்டாம்

நாளை நெதர்லாந்துக்கு எதிரான போட்டி என்பதால் ராகுல் பட்டையை கிளப்ப அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஒரு முறை அல்ல பல முறை இப்பர ராகுல் செயல்பட்டு இருப்பதால், அவரை அப்படியே ஒரங்கட்டி விட்டு ரிஷப் பண்ட் போன்ற வீரர்களுக்காவது தொடக்கத்தில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகன்றனர்.

ராகுல் ஆட்டமிழக்கும் முறை

ராகுல் ஆட்டமிழக்கும் முறை

இந்த அழகில் ராகுலை அடுத்த கேப்டனாக மாற்ற பிசிசிஐ திட்டுமிட்டுள்ளது தான் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச்சுவையாக இருக்கலாம். நாளை நெதர்லாந்துக்கு எதிரே சொதப்ப கூட வாய்ப்பு இருக்கிறது. எனெனில் இன் ஸ்விங் யாக்கர் லேங்த் பந்தை கண்டாலே, இரும்பில் காந்தம் ஓட்டுவது போல், பந்து ராகுலின் ஸ்டம்பை பதம் பார்த்துவிடும். அவ்வளவு ஏன், எங்கேயோ செல்லும் பந்தை கூட ராகுல் தனது ஸ்டம்ப் பக்கம் திருப்பிவிட்டு போல்ட் ஆகி விடுவார்.

Story first published: Wednesday, October 26, 2022, 20:28 [IST]
Other articles published on Oct 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+