Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியின் சதத்தால் ராகுலுக்கு ஆபத்து.. ? பிளேயிங் லெவனில் யார் இடம் பறிபோகும்.. பரபர தகவல்

மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்று தொடரை விட்டு வெளியேறியது.

Recommended Video

Kohli Opener-ஆ? கேள்விக்கு கடுப்பான KL Rahul | Aanee's Appeal

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெல்லும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆசிய கோப்பைத் தொடர் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தவறாக தேர்வு செய்யப்பட்டதன் விளைவாகவே இந்திய அணி தோற்றதாக பல விமர்சனங்களும் எழுந்துள்ளன.

கோலியால் ஆபத்து?

கோலியால் ஆபத்து?

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா ஓய்வெடுத்துக் கொண்டார்.விராட் கோலி , கேஎல் ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் கே எல் ராகுல் 41 பந்துகளை எதிர் கொண்டு 62 ரன்கள் எடுத்தார். ஆனால் விராட் கோலி 61 பந்துகளை எதிர் கொண்டு 122 ரன்கள் விளாசி அசத்தினார். இதனை அடுத்து விராட் கோலியின் இந்த சதத்தால் கே எல் ராகுல் இடத்திற்கு ஆபத்து வந்து விட்டதாக கருத கருதப்படுகிறது.

ராகுல் ஸ்ட்ரைடக ரேட்

ராகுல் ஸ்ட்ரைடக ரேட்

கேஎல் ராகுல் திறமையான வீரராக கருதப்பட்டாலும், டி20 போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு அண்மைக்காலமாக இருந்துள்ளது. 40 பந்துகளை எதிர் கொண்டு 50 ரன்கள் அடிப்பது அணிக்கு சரிவை தான் தரும் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் காயத்திலிருந்து திரும்பி உள்ள கேஎல் ராகுல் ஆசிய கோப்பை தொடரில் அவ்வளவு மோசமாக ஒன்றும் செயல்படவில்லை.

ஆசிய கோப்பையில் ராகுல்

ஆசிய கோப்பையில் ராகுல்

பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் கோல்டன் டக் ஆனார். இதேபோன்று இலங்கைக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் ராகுல் 6 ரன்களில் வெளியேறினார். மற்ற மூன்று போட்டிகளில் ஹாங்காங் எதிராக 36 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 28 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 62 ரன்களும் ராகுல் குவித்துள்ளார். இதனால் டி20 உலக கோப்பை போட்டியில் கே எல் ராகுல் தொடக்க வீரராக தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

ரோகித் சர்மா அணிக்கு திரும்பினால் ரோகித் சர்மாவும் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினால் மட்டுமே பன்ட், தினேஷ் கார்த்திக் என இரண்டு சிறந்த வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைக்கும். இடதுகை பேட்ஸ்மேன் அணிக்குத் தேவை என்பதால் ரிஷப் பண்ட் இடமும், ஃபினிஷர் ரோலில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுவதால் அவரது இடமும் கண்டிப்பாக பிளேயிங் லெவனில் இடம் பெற வேண்டும்.

ஆஸி. தொடர்

ஆஸி. தொடர்

இதனால் தொடக்க வீரராக கே எல் ராகுல் அணியை விட்டு வெளியே சென்றால் மட்டுமே இது நடக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் விராட் கோலி சதம் விளாசி கே எல் ராகுலுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கேஎல் ராகுல் எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்து டி20 உலக கோப்பை தொடரில் அவருடைய இடம் உறுதி ஆகும்.

Story first published: Friday, September 9, 2022, 17:16 [IST]
Other articles published on Sep 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+