Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க பேச்சுக்கெல்லாம் முக்கியத்துவமே தரதில்லை.. கோலியை சாதாரணமாக நினைக்காதீங்க.. கேஎல் ராகுல் பேச்சு

துபாய்: ஆசிய கோப்பை தொடரை முன்னிட்டு இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

Recommended Video

Asia Cup 2022: Virat Kohli-யின் வெறித்தனமான Net Practice

அப்போது செய்தியாளர்கள் பாகிஸ்தான் போட்டிக்கான தயாரிப்பு பணி குறித்தும், விராட் கோலி குறித்தும் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் அமைதியாக பதில் அளித்த ராகுல், கோலியை பற்றி பேசும் போது கொஞ்சம் பொங்கி விட்டார். அவர் பேசியது பின் வருமாறு,

கணக்கில் வராது

கணக்கில் வராது

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளோம். இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் மிக சவாலான ஒன்றாக இருக்கும். கடந்த முறை டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியை தழுவினோம். அதன் பிறகு இப்போது தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இரு அணிகளும் இது போன்ற பெரிய தொடரில் தான் சந்திக்கிறோம். இதற்கு முன்பு நாங்கள் எவ்வளவு முறை மோதினோம், எவ்வளவு முறை வென்றோம் என்பது எல்லாம் கணக்கில் வராது.

ஜீரோவிலிருந்து தொடங்கும்

ஜீரோவிலிருந்து தொடங்கும்

நாங்கள் மோதும் போது அனைத்தும் போட்டி அன்று ஜீரோவிலிருந்து தான் தொடங்கும். டி20 உலகக் கோப்பையில் அடைந்த தோல்வி நிச்சயம் எங்களை பாதித்தது. டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, போட்டியை அணுகுவதில் எங்கள் அணியில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் கேப்டனின் பேச்சை கேட்டு நடக்கிறோம். அது எங்களுக்கு நல்ல பலனை தருகிறது.

கோலிக்கு ஆதரவு

கோலிக்கு ஆதரவு

ஷாகின் ஆஃப்ரிடி ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் ஆசிய கோப்பையில் விளையாடி இருந்தால், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு எங்களுக்கும் ஒரு நல்ல பயிற்சியாக அமைந்திருக்கும். விராட் கோலி நல்ல மன உத்வேகத்துடன் உள்ளார். வெளியே நீங்கள் பேசுவதுக்கு எல்லாம் நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை. விராட் கோலி நிச்சயம் எங்களுக்கு முன்பை போல் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தருவார்.

வெற்றியுடன் தொடங்குவோம்

வெற்றியுடன் தொடங்குவோம்

கோலி மீண்டும் ஃபார்ம்க்கு திரும்புவார் என நம்புகிறோம். நான் காயத்தில் இருந்த போது கோலி ஆடிய மேட்சை பார்த்தேன். அப்போது அவர் பார்ம் அவுட் ஆன மாதிரியே விளையாட வில்லை. முதல் போட்டியில் எப்போது வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரை தொடங்க ஆர்வமாக உள்ளோம். இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்தப் போட்டிக்காக நன்கு தயாராகி உள்ளோம் என்று அவர் கூறினார்.

Story first published: Friday, August 26, 2022, 21:28 [IST]
Other articles published on Aug 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+