
பாராட்டத்தக்கது
எனவே டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என உத்வேகத்துடன் விளையாடினோம் இது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். இந்த வெற்றிக்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை செய்ய வேண்டியது இருந்தது. அவ்வளவு எளிதாக இந்த வெற்றி கிடைக்கவில்லை.ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிட்டது. எனினும் எங்கள் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது பாராட்டத்தக்கது.

கடினமாக மாறியது
கடைசி இரண்டு நாட்களில் பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது அவர்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லாமல் ரன்களை சேர்த்தார்கள். ஆனால் முதல் மூன்று நாட்கள் நிலைமை அப்படி அல்ல. ஆடுகளம் தோய்வாக இருந்ததால் பேட்ஸ்மேன்களும் ரன் எடுக்க கஷ்டப்பட்டனர். வங்கதேச தொடக்க வீரர்கள் விளையாடிய விதம் எங்களுக்கு ஆட்டத்தை மேலும் கடினம் ஆக்கியது. கடும் முயற்சி செய்தால் மட்டுமே விக்கெட் கிடைக்கும் என நாங்கள் நினைத்தோம்.

பாராட்டத்தக்க செயல்
வங்கதேச அணி பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது போதும். நாங்கள் எங்களுடைய உத்வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கவில்லை. நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை சில ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறோம். இதனால் டெஸ்ட் போட்டியில் வெற்றி சுலபமாக கிடைக்காது என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் முதலில் நன்றாக விளையாடினோம். சொற்ப ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 400 ரன்களை தொட்டது எல்லாம் மிகவும் பாராட்டத்தக்க செயல்.

பேட்டிங்கிற்கு பாராட்டு
புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், பந்த் மற்றும் அஸ்வின் ஆகியோர் சிறப்பாக விளையாடி எங்களுக்கு முதல் இன்னிங்சில் பெரிய இலக்கை பெற்றுத்தந்தனர். கீழ் வரிசை வீரர்களும் பேட்டிங்கிற்கு பங்காற்றுவது மிகவும் நல்ல விஷயம். அப்படி நடக்கும் போது கேப்டன்களுக்கு தனி நம்பிக்கை பிறக்கும். முதல் இன்னிங்ஸில் எங்கள் பந்துவீச்சாளர்கள் போட்டியை எங்களுக்காக தயார் செய்து கொடுத்து விட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மான் கில்லும், புஜாராவும் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

சுத்தமாக எடுபடவில்லை
கடைசி இன்னிங்ஸில் ஆடுகளத்தில் சுத்தமாக பந்து எடுபடவில்லை. ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் எப்படியோ விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டார்கள். வேகப் பந்துவீச்சாளர்களும் நன்றாக பந்துவீசி நெருக்கடி ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் எங்களை போட்டிக்கு திரும்ப அழைத்து வந்தார்கள். இந்தப் பந்துவீச்சை நாங்கள் பல ஆண்டுகளாக கட்டமைத்தது ஆகும்.

கவலைப்பட போவதில்லை
பந்துவீச்சாளர்களின் தரத்தை அவர்கள் இன்று காண்பித்து விட்டார்கள். இந்த போட்டியில் நாங்கள் வென்றோம் இருந்தும் இந்த போட்டியில் நாங்கள் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்பது குறித்து எல்லாம் நான் கவலைப்பட போவதில்லை. அடுத்த இரண்டு நாட்கள் நாங்கள் ரிலாக்ஸாக இருக்கப் போகிறோம். அதன் பிறகு அடுத்த டெஸ்ட் பற்றி யோசிக்க உள்ளோம் என்று கே எல் ராகுல் கூறினார்.


Click it and Unblock the Notifications











