Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீனியர் வீரருக்குதான் இடம்.. ருதுராஜ், சர்பராஸ் கானுக்கு இந்தியா ஏ அணியிலும் இடமில்லை.. ஏன் இப்படி?

நார்தாம்ப்டன்: இந்தியா 'ஏ' அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சர்பராஸ் கான் நீக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. மூத்த வீரர் கே.எல். ராகுல் இந்தியா 'ஏ' அணியுடன் இணைந்துள்ளார்.

ராகுல் இந்த இரண்டாவது போட்டியில் விளையாட இருக்கிறார். அவருக்கு இடமளிக்கும் வகையில் சர்பராஸ் கான் அணியிலிருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதல் போட்டியிலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்காத ருதுராஜ் கெய்க்வாட் இந்தப் போட்டியிலும் வெளியே அமர வைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

KL Rahul Returns Sarfaraz Khan Out for India A vs England Lions Practice Match

அதேபோல, நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தியா 'ஏ' அணியில் இடம் பிடித்திருக்கும் இஷான் கிஷன்-க்கும் போட்டியில் விளையாடும் வாய்ப்பு அளிக்கப்படாது என தெரிகிறது. சர்பராஸ் கான் முதல் பயிற்சிப் போட்டியில் அபாரமாக விளையாடி 92 ரன்கள் அடித்திருந்தார். ஆனால், அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்தியா 'ஏ' அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.

எனவே, இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் கே.எல். ராகுல் பயிற்சி பெறும் வகையில் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் விளையாட இருக்கிறார். அவருக்கு இடமளிக்கும் வகையில் சர்பராஸ் கான் நீக்கப்பட இருக்கிறார்.

அதேபோல, பந்துவீச்சில் ஆகாஷ் தீப் மற்றும் தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக ஹர்ஷ் தூபே மற்றும் ஹர்ஷித் ரானா அணியிலிருந்து நீக்கப்பட உள்ளனர். அவர்கள் இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் தீப் இந்திய அணியில் இருக்கிறார். அவருக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களைத் தவிர வேறு மாற்றங்கள் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை.

அதன்படி, தற்போதைய இந்தியா 'ஏ' பிளேயிங் லெவனில் அபிமன்யு ஈஸ்வரன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், கே.எல். ராகுல், துருவ் ஜூரெல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோட்டியான், ஆகாஷ் தீப், அன்ஷுல் கம்போஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Thursday, June 5, 2025, 9:42 [IST]
Other articles published on Jun 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+