Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாஸிலேயே 2 பெரும் பின்னடைவு.. 2வது டெஸ்ட் போட்டி.. கே.எல்.ராகுல் முடிவால் ரசிகர்கள் கொந்தளிப்பு!

டாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய வீரரை கழட்டிவிட்டு, கே.எல்.ராகுல் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இரு அணிகளும் மோதும் இந்த 2வது போட்டி டாக்காவில் உள்ள ஸ்ரீ பங்க்ளா மைதானத்தில் தொடங்கியது. 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளதால், ஒயிட் வாஷ் செய்யும் முணைப்புடன் களமிறங்கியுள்ளது.

ஆனால் டாஸிலேயே சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி கேப்டன் சகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவுக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு பின்னடைவு

சட்டோகிராம் மைதானத்தில் முதலில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த மைதானம் பின்னர் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது. ஆனால் 2வது போட்டி நடைபெறும் டாக்காவில் வேகப்பந்துவீச்சாளர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இங்கு 2வதாக பேட்டிங் செய்யும் அணிக்கு தான் சாதகமாக இருக்கும். எனவே தான் டாஸில் இந்தியா அடி வாங்கியுள்ளது.

மோசமான முடிவு

மோசமான முடிவு

இந்நிலையில் ப்ளேயிங் 11 தேர்வு செய்வதிலும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் கே.எல்.ராகுல். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் எடுக்க தடுமாறிய போது குல்தீப் யாதவ் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களும், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்களும் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அக்‌ஷர் பட்டேல் மற்றும் அஸ்வின் ஆகியோர் பெரியளவில் சோபிக்கவில்லை. ஆனால் குல்தீப்பை நீக்கியுள்ளனர்.

 12 ஆண்டு போராட்டம்

12 ஆண்டு போராட்டம்

குல்தீப் யாதவுக்கு மாற்று வீரராக ஜெய்தேவ் உனத்கட் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டே இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான உனத்கட் 12 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தற்போது தான் வாய்ப்பை பெற்றுள்ளார். 3 ஸ்பின்னர்கள் தேவையில்லை என்ற முடிவு சரியானது தான், ஆனால் சரியாக விளையாடாத ஸ்பின்னர்கள் இருக்கையில், நிறைய விக்கெட்களை எடுத்த குல்தீப்பை ஏன் ஒதுக்க வேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

மற்றபடி அணியில் எந்தவித மாற்றமும் இல்லை. பேட்டிங்கில் சுப்மன் கில், கே.எல்.ராகுல், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஆகியோர் பலமாக உள்ளனர். பந்துவீச்சில் அக்‌ஷர் பட்டே, அஸ்வின், அஸ்வின், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்கவிருக்கின்றனர்.

Story first published: Thursday, December 22, 2022, 9:20 [IST]
Other articles published on Dec 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+