தர்பார் படத்தின் வில்லன் மகளை காதலிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்.. செம க்யூட் ஜோடி!

டெல்லி : ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் தர்பார் படத்தில் வில்லனாக நடித்து இருப்பவர் பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.

அவருடைய மகள் ஆதியா ஷெட்டியை, இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் காதலித்து வருகிறார்.

மேரி கோம் மீது இளம் வீராங்கனை பரபரப்பு குற்றச்சாட்டு.. போட்டிக்குப் பின் வெடித்த சர்ச்சை!

கிசுகிசு

கிசுகிசு

இவர்கள் இருவரும் காதலிப்பதாக அவ்வப்போது கிசுகிசு வலம் வந்த நிலையில், இடையே ராகுல் அதை மறுத்தார். ஆதியா ஷெட்டியும் இந்த விஷயத்தில் மௌனம் காத்தார்.

அந்த புகைப்படம்

அந்த புகைப்படம்

எனினும், இரு நாட்கள் முன்பு விமான நிலையத்தில் ராகுல் - ஆதியா ஷெட்டி ஒன்றாக செல்லும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ராகுல் மறுத்தது உண்மையா? அப்படி என்றால் இது என்ன? என கேள்வி எழுப்பின பாலிவுட் பத்திரிக்கைகள்.

இன்ஸ்டாகிராம் பதிவு

இன்ஸ்டாகிராம் பதிவு

சில நாட்களாக இருவரும் சமூக வலைதளங்களில் தங்கள் காதல் பற்றி வெளியே தெரியாமல் அமைதி காத்த நிலையில், ராகுல் திடீரென ஆதியா ஷெட்டியுடன் இருக்கும் வேடிக்கையான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

என்ன புகைப்படம்?

என்ன புகைப்படம்?

பழைய காலத்து தொலைபேசி பூத் ஒன்றில் இருவரும் இருக்கிறார்கள். அங்கே ராகுல் தொலைபேசியில் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு பேசுவது போலவும், ஆதியா ஷெட்டி சிரித்த முகமாக இருப்பதும் போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ஹலோ.. தேவி பிரசாத்...?

இதன் கீழே. "ஹலோ.. தேவி பிரசாத்...?" என ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த வாசகம் ஆதியா ஷெட்டியின் தந்தை சுனில் ஷெட்டி பற்றியது.

சுனில் ஷெட்டி வசனம்

சுனில் ஷெட்டி வசனம்

"ஹேரா பேரி" என்ற புகழ்பெற்ற பாலிவுட் நகைச்சுவை படம் ஒன்றில் சுனில் ஷெட்டி, "ஹலோ.. தேவி பிரசாத்...?" என்ற வசனத்தை பேசி இருப்பார். அதை வைத்து அவரை கலாய்த்துள்ளார் ராகுல்.

சுனில் ஷெட்டி வரவேற்பு

சுனில் ஷெட்டி வரவேற்பு

இதில் முக்கியமான விஷயம், இந்த பதிவை வரவேற்று கமென்ட் போட்டு இருந்தார் சுனில் ஷெட்டி. ராகுல் - ஆதியா ஷெட்டி காதலுக்கு சுனில் ஷெட்டி பச்சைக் கொடி காட்டி விட்டார் என்பதையே இது காட்டுகிறது.

தவான், பண்டியா கமென்ட்

தவான், பண்டியா கமென்ட்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான், ஹர்திக் பண்டியா ஆகியோரும் இந்த புகைப்பட பதிவின் கீழ் நல்ல ஜோடி என கூறி தங்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

நடிகை ஆதியா ஷெட்டி

நடிகை ஆதியா ஷெட்டி

ஆதியா ஷெட்டியும் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் ஹீரோ என்ற பாலிவுட் வெற்றிப் படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்திய அணியில் ராகுல்

இந்திய அணியில் ராகுல்

துவக்க வீரரான ராகுல் இந்திய அணியில் மிட௮இல் ஆர்டரில் ஆடி வந்த நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் துவக்க வீரராக தனக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்தலாக ஆடி தன்னை நிரூபித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
KL Rahul shared a picture with girlfriend Athiya Shetty in his Instagram
Story first published: Saturday, December 28, 2019, 21:48 [IST]
Other articles published on Dec 28, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X