Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா என்றால் கசக்கும்.. ஐபிஎல் என்றால் இனிக்குமா? கேஎல் ராகுல் முடிவுக்கு எதிர்ப்பு

பெங்களூரு: இந்திய வீரர் கே.எல். ராகுல் எடுத்த முடிவு ரசிகர்களினடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய, இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரில் பல்வேறு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் இந்திய அணி தட்டு தடுமாறி இருந்த வீரர்களை வைத்து தொடரை வென்றது.

காயம்

காயம்

இந்த நிலையில், டெஸ்ட் போட்டியும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில் எஞ்சிய போட்டியில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறும். இந்த இக்கட்டான நிலையில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஆனால் தமக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாக கூறி, ராகுல் இலங்கை தொடரில் விளையாடவில்லை.

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சி

இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வரும் 12ஆம்தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது. ஆனால் தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு திரும்பாமல், ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறார். வரும் 26ஆம் தேதி தொடங்கும் போட்டிக்காக பெங்களூருவில் ராகுல் வலைப்பயிற்சியை தொடங்கி உள்ளார்.

எது முக்கியம்

எது முக்கியம்

கே.எல்.ராகுலை 17 கோடி ருபாய் கொடுத்து புதிய அணியான லக்னோ தேர்வு செய்துள்ளது, அந்த அணிக்கு ராகுல் கேப்டனாக செயல்பட உள்ளார். இதனால் தமக்கு காயம் எங்கே அதிகமாகிவிடுமோ என்ற பயத்தில் கேஎல் ராகுல், இந்தியா தொடருக்கு தயாராகாமல் அமைதி காத்துவிட்டு, தற்போது ஐபிஎல் தொடருக்காக பேட்டிங் பயிற்சியை ராகுல் தொடங்கி உள்ளார்.

ரசிகர்கள் கண்டனம்

ரசிகர்கள் கண்டனம்

ராகுலின் இந்த முடிவு ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராகுலுக்கு மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்க கூடாது என்றும், அகர்வால், சுப்மான் கில் வைத்தே டெஸ்ட் அணியை தயாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். அனைத்துக்கும் கருத்து சொல்லும் லக்னோ அணியின் மெண்டர் கம்பீர் ,இந்த விவகாரத்தில் அமைதியாக உள்ளது என் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Story first published: Tuesday, March 8, 2022, 17:22 [IST]
Other articles published on Mar 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+