Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்ல மனசுய்யா.. 4 பேருக்கு நல்லதுன்னா எல்லாத்தையும் எடுத்துக்குங்க.. அள்ளிக் கொடுத்த இந்திய வீரர்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி வீரர் கேஎல் ராகுல் ஏப்ரல் 18 அன்று தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

Recommended Video

KL Rahul to auction his world cup accessories to help poor children.

தன் பிறந்த நாளுக்கு உதவி செய்ய நினைத்த அவர், தன் உலகக்கோப்பை கிரிக்கெட் பேட், கிளவுஸ், ஹெல்மட் மற்றும் ஜெர்சிக்களை ஏலத்தில் விட இருக்கிறார்.

அதில் வரும் தொகையை கல்வி கற்கும் வாய்ப்பை இழந்த ஏழைக் குழந்தைகளுக்கு, அதை பெற்றுத் தரும் "அவேர் பவுண்டேஷன்" அமைப்பிற்கு வழங்க உள்ளார்.

கேஎல் ராகுல் நீக்கம்

கேஎல் ராகுல் நீக்கம்

கேஎல் ராகுல் இந்திய அணியில் பல ஆண்டுகளாக ஆடி வருகிறார். எனினும், கடந்த ஆண்டில் தான் ஒருநாள் மற்றும் டி20 அணியில் நிரந்தர இடத்தை பெற்றார். அதுவரை அணியில் தேர்வு செய்யப்படுவதும், பின் நீக்கப்படுவதுமாக இருந்தார்.

2019 உலகக்கோப்பை

2019 உலகக்கோப்பை

பல வாய்ப்புகளை பெற்றும் இடையே பார்ம் அவுட் ஆனார். ஆனால், 2019 உலகக்கோப்பை தொடர் முதல் அவரது நிலை மாறியது. அந்த தொடரில் காயம் அடைந்த ஷிகர் தவானுக்கு பதில் துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடினார்.

விக்கெட் கீப்பர்

விக்கெட் கீப்பர்

அதன் பின் தவான் அணிக்கு திரும்பியதும் மிடில் ஆர்டரில் வாய்ப்பு பெற்றார். அதிலும் தன்னை நிரூபித்தார். பின் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய நிலையில், அவர் காயத்தால் விலகிய போது விக்கெட் கீப்பிங் செய்த ராகுல் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக மாறினார்.

பிறந்தநாள் உதவி

பிறந்தநாள் உதவி

தற்சமயம் அணியில் முக்கிய வீரராக இருக்கிறார் ராகுல். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 18 அன்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். அதை அடுத்து அவர் தன் பிறந்த நாளை ஒட்டி "அவேர் பவுண்டேஷன்" (Aware Foundation) எனும் அமைப்பு மூலம் கல்வி கற்க வாய்ப்பு இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு உதவ உள்ளதாக கூறி உள்ளார்.

ஏலம்

ஏலம்

2019 உலகக்கோப்பை தொடரில் ராகுல் பயன்படுத்திய பேட், மற்றும் அவரது கிளவுஸ், ஹெல்மட், காலில் கட்டும் பேடுகள், மற்றும் இதர நினைவுச் சின்னங்களை பாரத் ஆர்மி எனும் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர் குழு மூலம் ஏலம் விட இருக்கிறார்.

லாக்டவுனில் உதவி

லாக்டவுனில் உதவி

அதில் கிடைக்கும் பணத்தை அந்த பவுண்டேஷனுக்கு அளிக்க இருக்கிறார். கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. அதனால், லாக்டவுனில் தனிமையில் இருக்கும் நிலையில் இந்த உதவியை செய்ய இருக்கிறார் ராகுல்.

Story first published: Monday, April 20, 2020, 19:51 [IST]
Other articles published on Apr 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+