Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி அடித்த சதம்.. என்னை அணியை விட்டு போக சொல்றீங்களா? பத்திரிகையாளரிடம் பாய்ந்த கேஎல் ராகுல்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி சதம் விளாசினார்.

Recommended Video

Kohli Opener-ஆ? கேள்விக்கு கடுப்பான KL Rahul | Aanee's Appeal

இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தனது 71 வது சதத்தை அவர் பூர்த்தி செய்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆசிய கோப்பை தோற்ற கவலையே தெரியாத அளவுக்கு விராட் கோலியின் சதம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இதனிடையே இந்திய அணி வெற்றி குறித்து தற்காலிக கேப்டன் கே எல் ராகுல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விராட் கோலி அடித்த ரன்கள் அணிக்கு ஒரு போனஸ் போல் அமைந்து விட்டதாக ராகுல் கூறினார். இன்றைய செயல்பாடு விராட் கோலியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் போட்டிக்காக கடுமையாக உழைத்து வருகிறார் . ஒரு அணியாக அனைத்து வீரர்களும் களத்தில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

நீங்கள் ஒரு இரண்டு மூன்று இன்னிங்ஸ் விளையாடினாலே உங்களுடைய தன்னம்பிக்கை உங்களுக்கு கிடைத்துவிடும். விராட் கோலி இன்று சதம் விளாசியதால் அவர் தற்போது நிம்மதியாக இருப்பார். அவருடைய மனதளவில் எந்த மாற்றமும் அவர் செய்யவில்லை. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் எப்போதும் போலவே போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

ஆச்சரியம் இல்லை

ஆச்சரியம் இல்லை

அதிலும் எவ்வித மாற்றமும் விராட் கோலி செய்யவில்லை. நாம் அனைவருமே நம்பர் மீது தான் ஆர்வமாக இருக்கிறோம். அனைவருமே ஒரு வீரர் சதம் அடித்தால் மட்டும்தான் அவர் நன்றாக விளையாடுகிறார் என்று நினைக்கிறோம். ஆனால் விராட் கோலி சதம் அடிக்கவில்லை என்றாலும் அணியின் ஒரு தூணாக விளங்கிக் கொண்டிருந்தார். அவர் சதம் அடித்தது குறித்து எங்களுக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை.

கோபமான ராகுல்

கோபமான ராகுல்

தற்போது அவருடைய உத்வேகம் பல மடங்கு அதிகரித்திருக்கும் என்று கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர் விராட் கோலி சதம் விளாசினால் அவரை நீங்க தொடக்க வீரராக களமிறங்குவாரா என்று கேள்வி கேட்டார். இதனால் கடுப்பான கே எல் ராகுல், அப்போது என்னை அணியை விட்டு வெளியே உட்கார சொல்கிறீர்களா என்று கோபமாக கேட்டார். இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட ராகுல், விராட் கோலி எந்த இடத்தில் விளையாடினாலும் சதம் விளாசுவார் என்று பதிலளித்தார்.

Story first published: Friday, September 9, 2022, 16:02 [IST]
Other articles published on Sep 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+