Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி, டீ வில்லியர்ஸ் ரெண்டு பேரையும் ஐபிஎல்லுல இருந்து தடை செய்யணும் -ராகுல்

துபாய் : விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் இருவரையும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்ற ஐபிஎல் நிர்வாகிகளிடம் கோரிக்கை வைப்பேன் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

விராட் கோலியுடன் மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் லைவ் செஷனில் பேசிய ராகுல், ஐபிஎல்லில் அவர் மாற்ற விரும்பும் விதி எது என்பது குறித்த கேள்விக்கு வேடிக்கையாக இவ்வாறு பதிலளித்துள்ளார்.

5000 ரன்கள் அடித்தவுடன் இவர்கள் இருவரையும் வெளியேற்ற வேண்டும் அடுத்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

 சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

ஐபிஎல்லில் முக்கியமான வீரர்களாக விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் திகழ்ந்து வருகின்றனர். கடந்த 2011ல் இவர்கள் இருவரும் அணியில் இடம்பெற்றது முதல் முக்கியமான பார்ட்னர்ஷிப்புகளில் ஈடுபட்டு, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

 ஐபிஎல்லில் இருந்து வெளியேற்ற வேண்டும்

ஐபிஎல்லில் இருந்து வெளியேற்ற வேண்டும்

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுலுடன் விராட் கோலி மேற்கொண்ட இன்ஸ்டாகிராம் லைவ் செஷனில் பல்வேறு விஷங்களை ராகுல் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய ராகுல், விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் இருவரையும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்ற ஐபிஎல் நிர்வாகத்திடம் தான் வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

 நீக்க வலியுறுத்துவேன்

நீக்க வலியுறுத்துவேன்

ஐபிஎல் தொடரில் மாற்ற விரும்பும் விதி குறித்து விராட் கோலி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தொடர்ந்து விராட் கோலி மற்றும் டீ வில்லியர்ஸ் ஐபிஎல்லில் ரன்களை அடித்து வருவதாகவும், அவர்கள் 5000 ரன்களை அடித்த பின்பு ஐபிஎல்லில் இருந்து நீக்க நிர்வாகத்திடம் தான் கேட்பேன் என்றும், அடுத்தவர்கள் ரன்களை அடிக்க அது வாய்ப்பாக அமையும் என்றும் கூறியுள்ளார்.

 வெற்றி முனைப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்

வெற்றி முனைப்பில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கடந்த சனிக்கிழமை அபுதாபியில் நடைபெற்ற கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வியடைந்தது. அந்த அணிக்கு இன்னும் 7 போட்டிகள் உள்ள நிலையில் அதில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இன்று ஆர்சிபி அணியை எதிர்த்து மோதவுள்ளது.

Story first published: Thursday, October 15, 2020, 16:01 [IST]
Other articles published on Oct 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+