லண்டன் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் பில்டிங் செய்யும் போது காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து பாதியில் வெளியேறினார்.
ராகுலின் காயம் நினைத்ததை விட பெரிய அளவில் இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டியில் இருந்து விலகினார்.

மேலும் ராகுல் எப்போது இந்தியா அணிக்கு திரும்புவார் என்ற தகவலும் உறுதியாகத் தெரியவில்லை. கே எல் ராகுல் லண்டனில் தங்கி தனது உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்ற தகவல் வெளியானது. இதனால் ராகுலின் வருகைக்காக ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்தனர்.இந்த நிலையில் தான் கேஎல் ராகுலில் ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியிருக்கிறது.
லண்டனில் உள்ள ஸ்ட்ரிப் கிளப்பிற்கு சென்ற ராகுல் அங்கு நிர்வான ஆடையுடன் அழகிகள் ஆடியதை பார்த்து ரசிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்தியாவில் மதிப்புமிக்க கிரிக்கெட் வீரராக விளங்கும் ராகுல் இது போன்ற காரியத்தில் ஈடுபடலாமா என்றும் பலரும் அவருக்கு அறிவுரை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து ராகுலின் மனைவி தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் நான் அனைத்து விஷயத்துக்குமே பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கத்தான் நினைப்பேன். ஆனால் சில சமயம் உங்களுக்காக நீங்கள் நின்றே ஆக வேண்டும்.
கே.எல். ராகுல், நான் மற்றும் எங்களுடைய நண்பர்கள் எப்போதும் போல் சில இடத்திற்கு செல்வது வழக்கம்தான்.எனவே சில விஷயத்தை திரித்து பேசுவதை நிறுத்துங்கள். ஏதேனும் செய்தியை வெளியிடுவதற்கு முன்பு அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிடுங்கள். அமைதியும் அன்பும் நிலவட்டும் என்று ராகுலின் மனைவி அதியா செட்டி குறிப்பிட்டு இருக்கிறார்.