For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேஎல் ராகுல் மனைவி கர்ப்பம்! முதல்முறையாக கேமராவில் பதிவான வீடியோ! துப்பட்டாவில் மறைத்த ஆதியா ஷெட்டி

மும்பை: கர்ப்பமாக இருப்பதை அறிவித்த பின்னர் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுலின் மனைவி ஆதியா ஷெட்டி முதல்முறையாக கேமராவில் சிக்கியுள்ளார். அப்போது அவர் "பேபி பம்ப்"-ஐ துப்பட்டாவில் மறைத்து விரைவாக காரில் ஏறி சென்ற வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆதியா ஷெட்டி இருவரும் 2019ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். ஆதியா ஷெட்டி மாடலிங் துறையில் இருந்து வந்த நிலையில், பார்ட்டி ஒன்றில் கேஎல் ராகுலை சந்தித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறிய போது, மும்பையில் இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர்.

ind vs sl kl rahul athiya shetty

பின்னர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் மும்பையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என்று ஏராளமானோர் அவர்களுக்கு வாழ்த்து கூறினர். பின்னர் இருவரும் இந்தியாவின் முக்கியமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தனர்.

ஐபிஎல் போட்டிகளின் போது கேஎல் ராகுலை உற்சாகப்படுவத்துவதற்காக ஆதியா ஷெட்டி நேரில் வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி கேஎல் ராகுல் - ஆதியா ஷெட்டி இருவரும் இணைந்து தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு அழகான ஆசீர்வாதம் அடுத்த ஆண்டு நமக்கு கிடைக்கப் போகிறது என்று பதிவிட்டனர். இதன் மூலமாக ஆதிஷா ஷெட்டி கர்ப்பமாக இருப்பது உறுதியானது.

அப்போது கேஎல் ராகுல் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வந்தார். அதேபோல் ஆதியா ஷெட்டி மும்பையில் இருந்தார். ஆதியா ஷெட்டி கர்ப்பமாக இருப்பதால், கேஎல் ராகுலுடன் ஆஸ்திரேலியா பயணிக்கவில்லை என்று பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கர்ப்பமான பின்னர் கேஎல் ராகுல் மனைவி ஆதியா ஷெட்டி முதல்முறையாக கேமராவில் சிக்கியுள்ளார்.

மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த போது, அவரை பலரும் கண்டறிந்துள்ளனர். அப்போது "பேபி பம்ப்" தெரியாமல் இருப்பதற்காக ஆதியா ஷெட்டி சல்வார் அணிந்து துப்பட்டாவை வைத்து மறைந்திருந்தார். பின்னர் கேமராவில் சிக்கியதை அறிந்த அவர் உடனடியாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

கர்ப்பமான பின் ஆதியா ஷெட்டி முதல்முறையாக வெளியில் வந்து கேமராவில் சிக்கி இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டான நிலையில், ரசிகர்கள் மீண்டும் கேஎல் ராகுலுக்கு வாழ்த்து கூறி வந்தனர். அதேபோல் கேஎல் ராகுல் - ஆதியா ஷெட்டியின் குழந்தையை வரவேற்பதற்காக சுனில் ஷெட்டியும் ஆர்வமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தனியார் நிகழ்ச்சி ஒன்றிலும் பகிர்ந்துள்ளார்.

Story first published: Wednesday, November 20, 2024, 10:57 [IST]
Other articles published on Nov 20, 2024
English summary
KL Rahul Wife Athiya Shetty spotted at Mumbai Airport and hide her Baby Bump with Dupatta
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+