Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு இன்னிங்ஸ் போதும்.. கே.எல்.ராகுல் விரைவில் நிரூபிப்பார்.. ஆதரவாக நிற்கும் கவுதம் கம்பீர்!

சென்னை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி இரு போட்டிகளில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

என்ன தான் வெற்றிகளை இந்திய அணி பெற்றாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் ரன் குவிக்க தடுமாறி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளின் 3 இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ள கே.எல்.ராகுல் 20, 17, 1 ஆகிய சொற்ப ரன்களில் நடையை கட்டினார்.

கடைசியாக 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் அடித்துள்ளார். அதன்பின்னர் அவர் ஆடிய 11 இன்னிங்ஸ்களில் கே.எல்.ராகுல் 30 ரன்களை கூட தாண்டவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவரை அணியில் இருந்து நீக்கிவிடுங்கள் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

சுப்மன் கில் வாய்ப்பு?

சுப்மன் கில் வாய்ப்பு?

பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான வெங்கடேஷ் பிரசாத் கே.எல்.ராகுலுக்கு எதிராக ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கே.எல்.ராகுல் அளவிற்கு வேறு எந்த வீரருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டதில்லை என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

கம்பீர் ஆதரவு

கம்பீர் ஆதரவு

இந்த நிலையில் கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக இந்திய முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். கே.எல்.ராகுல் ஃபார்ம் குறித்து கவுதம் கம்பீர் கூறுகையில், கே.எல்.ராகுல் குறித்து பேசுபவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டி எவ்வளவு கடினமானது எனத் தெரியாது. ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றால் அவருக்கு அதிக ஆதரவு தேவை என்றுநான் நம்புகிறேன்.

ரோகித் சர்மா தடுமாறினார்

ரோகித் சர்மா தடுமாறினார்

கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்து கடைசிவரை ரன்களை குவித்த ஒரு வீரரின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம். எல்லா வீரர்களுக்கும் இதுபோன்ற காலக்கட்டம் வரும். அப்போது ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் தான் உறுதுணையாக இருக்க வேண்டும். ரோகித் ஷர்மா கிரிக்கெட் கெரியரை தொடங்கும் போது தடுமாறினார். ஆனால் இப்போது சிறப்பாக விளையாடி வருகிறார்.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சீரியஸ்-க்கு நடுவில் இப்படி பேசுவது தேவையில்லாதது. இப்போது இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒரு வீரர் ரன்களை குவிக்கிறாரா இல்லையா என்பது ட்ரெஸிங் ரூமில் தெரியும். மீடியாவோ முன்னாள் கிரிக்கெட் வீரர்களோ ஒரு வீரர் செயல்பாடுகளை பற்றி பேசுவது நல்லது இல்லை. கே.எல்.ராகுல் தனித்துவிட வேண்டும். அவர் சிறந்த வீரர் என்பது அனைவருக்கும் தெரியும்.

மழை போல் ரன்கள்

மழை போல் ரன்கள்

கே.எல்.ராகுல் சமூக வலைதளங்களை பார்க்காமல், பந்தை மட்டும் பார்த்து ரன்கள் சேர்த்தாலே போதுமானது. நிச்சயம் அவர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஒரேயொரு போட்டியில் ரன்கள் சேர்த்தாலே போதும். அதன் பின் அவர் பேட்டில் இருந்து ரன்கள் மழை போல் கொட்டத் தொடங்கும் என்று தெரிவித்தார்.

Story first published: Friday, February 24, 2023, 22:32 [IST]
Other articles published on Feb 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+