Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேஎல் ராகுலுக்கு இனி நல்ல காலம் வந்துருச்சி.. அதிக ரன் குவிப்பார்.. பிரபல ஜோதிடர் கணிப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே எல் ராகுலுக்கு டிசம்பர் 3ஆம் தேதியிலிருந்து நல்ல காலம் பிறப்பதாக பிரபல ஜோதிடர் பிரசாந்த் கிண்ணி கணித்திருக்கிறார். ஒரு காலத்தில் அடுத்த விராட் கோலி என்று கே எல் ராகுலை ரசிகர்கள் பாராட்டுவார்கள்.

இந்திய டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியில் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் தான் வரப்போகிறார் என்று பலரும் கணித்திருந்தனர்.ஆனால் காயம் மற்றும் ஃபார்ம் அவுட் போன்ற பிரச்சனைகளால் கே எல் ராகுல் அணியில் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்தார்.

ipl auction 2025 kl rahul ipl 2025

அது மட்டும் இல்லாமல் டி20 இந்தியா அணியில் தொடக்க வீரராக இருந்த கேஎல் ராகுல் தற்போது ஸ்டிரைக் ரேட் போன்ற பிரச்சனைகளால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த சூழலில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே எல் ராகுலை அந்த அணி உரிமையாளர் மைதானத்திலே வைத்து ரசிகர்கள் முன் கே எல் ராகுலை திட்டினார்.

அதனைத் தொடர்ந்து கே.எல். ராகுல் லக்னோ அணி நீக்கப்பட்டார். தற்போது கே எல் ராகுல் டெல்லி அணிக்கு தேர்வாகியிருக்கிறார். இந்த சூழலில் கே எல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தார்.

இந்த சூழலில் கே எல் ராகுலின் ஜாதகத்தை கணித்திருக்கும் பிரசாந்த் கிணி என்ற ஜோதிடர் ஒருவர் கேஎல் ராகுலுக்கு டிசம்பர் மூன்றாம் தேதியிலிருந்து நல்ல காலம் பிறந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கே எல் ராகுல் சிறப்பாக ரன்களை குவித்து ஜொலிப்பார் என்றும் அவர் கனத்திருக்கிறார்.

இதேபோன்று 2025 செப்டம்பர் மாதம் முதல் ஜூன் 2026 ஆண்டு வரை கே எல் ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி ரன்களை குவிப்பார் என்றும் இதேபோன்று செப்டம்பர் 2026 முதல் பிப்ரவரி 2027 வரையும் கேஎல் ராகுலின் கிரிக்கெட் வாழ்க்கை உச்சத்தில் இருக்கும் என்றும் அவர் கனத்திருக்கிறார்.2027 உலக கோப்பையிலும் கேஎல் ராகுல் விளையாடுவார் என தெரிவித்துள்ள பிரசாந்த் கினி கே எல் ராகுல் 2029 செப்டம்பர் மாதம் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி அதன் பிறகு ஓய்வு பெறுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, November 27, 2024, 21:56 [IST]
Other articles published on Nov 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+