அய்யோ கடவுளே.. நடராஜனுக்கு வந்த சோதனை.. முட்டியில் காயமாம்.. டி20 தொடரில் விளையாடுவது சந்தேகம்தான்!
பெங்களூரு : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை மறுதினம் முதல் டி20 தொடர் துவங்கவுள்ளது.
5 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்திலேயே நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் டி நடராஜன் இடம்பெற்றுள்ள நிலையில் தற்போது காயம் காரணமாக அவர் தொடரில் பங்கேற்பது சந்தேகம் என்று என்சிஏ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கண்டுள்ளது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் வரும் ஜூன் 18ம் தேதி சௌதாம்ப்டனில் மோதவுள்ளது.

இடம்பெற்ற நடராஜன்
அடுத்ததாக இரு அணிகளும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் மோதவுள்ளன. நாளை மறுதினம் முதல் துவங்கவுள்ள இந்த போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்திலேயே நடைபெறவுள்ளது. இதற்கான அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் யாக்கர் கிங் டி நடராஜன் இடம்பெற்றிருந்தார்.

தொடரில் இடம்பெறுவது சந்தேகம்
இந்நிலையில் நடராஜனுக்கு முட்டி மற்றும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் டி20 தொடரில் இடம்பெறுவது சந்தேகம்தான் என்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி சார்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த நடராஜன் சிறப்பான செயல்பாடுகளை காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஏமாற்றம்
அந்த தொடரின் வெற்றியில் அவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது. இந்நிலையில் வரும் அக்டோபர் -நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் இங்கிலாந்துக்கு எதிரான இந்த டி20 தொடரில் நடராஜன் பங்கேற்காமல் போவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும்.

வருண் சக்ரவர்த்தி நீக்கம்
இதேபோல வருண் சக்ரவர்த்தியும் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். என்சிஏவில் அவர் தனது பிட்னசை நிரூபிக்க தவறியதையடுத்து இந்த டி20 தொடரில் அவருக்கு பதிலாக ராகுல் சஹர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications